Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pension Scheme in Tamil: ரூ.10,000 பென்ஷன் பெறும் சூப்பரான திட்டம்…! அதுக்கு இத மட்டும் பண்ணுங்க போதும்.

Gowthami Subramani July 11, 2022 & 13:30 [IST]
Pension Scheme in Tamil: ரூ.10,000 பென்ஷன் பெறும் சூப்பரான திட்டம்…! அதுக்கு இத மட்டும் பண்ணுங்க போதும்.Representative Image.

Pension Scheme in Tamil: பொதுநலம் கருதி, மத்திய, மாநில அரசு பல்வேறு வகைகளில் சிறுவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி, கீழ்க்கண்ட தொகையினை மாதந்தோறும் சேமிப்பு வைப்பதன் மூலம், வயதான காலத்தில் பென்ஷன் தொகை பெறலாம். அந்த வகையில், அடல் பென்ஷன் திட்டம் என்ற திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து பென்ஷன் தொகை பெற வேண்டியதற்கான தகுதிகள், திட்டத்தின் நோக்கம் உள்ளிட்டவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் (Atal Pension Yojana Scheme in Tamil)

இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வுக்காலங்களில் உதவும் நோக்கத்தில் அவர்களின் 60 வயதுக்குப் பின், மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான ஓய்வூதியத் தொகையைப் பெறலாம்.

திட்டத்தில் இணைவதற்குத் தேவையான தகுதி

இந்த அருமையான பென்ஷன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு கொண்ட நபர்கள் அனைவருமே பங்கேற்கலாம்

முக்கியமாக, இந்த திட்டத்தில் சேரும் நபர்கள் கண்டிப்பாக தங்களுக்கான நாமினியைத் தேர்வு செய்வது அவசியம்.

திட்டத்தில் இணைய முடியாதவர்கள்

இந்த திட்டத்தின் கீழ் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களோ, 40 வயதிற்கு அதிகமான வயதைக் கொண்ட நபர்களோ பங்கேற்க முடியாது.

சேமிப்புக் கணக்கு எப்படி தொடங்கலாம்?

இந்த திட்டத்தின் கீழ் பென்ஷன் தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்டவற்றைச் செய்தல் வேண்டும்.

நாம் முன்னரே பார்த்தது போல், விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்தே, நமது பென்ஷன் தொகையும் மாறும்.

அதன் படி, இதில் 18 வயதில் ஒருவர் மாதந்தோறும் ரூ.210 டெபாசிட் செய்வதன் மூலம், 60 வயதிற்குப் பிறகு ரூ.5000 பென்ஷன் தொகையினை மாதந்தோறும் பெறலாம்.

குறைந்த மற்றும் அதிகபட்ச சேமிப்புத் தொகை

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சம் ரூ.5,000 வரை பென்ஷன் தொகையைப் பெறலாம்.

பணம் செலுத்துவது எப்படி?

இந்தத் திட்டத்தின் கீழ் சேர்ந்து பணம் சேர்த்தும் நபர்களின் கணக்குகள் வங்கி சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் படி, வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டு வரவு வைக்கப்படும்.

அதன் பின், மாதந்தோறும் நமது கணக்கிலிருந்து பணம் எடுத்து ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்பட்டு வரும். இவ்வாறு சேமிக்கப்படும் போது, ஒருவர் ஒரு மாதத்தில் எந்த தேதியில் பணம் வரவு வைத்து தொடங்குகிறாரோ அடுத்த மாதம் அதே தேதியில் பணம் எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வரும்.

இடையில் பென்ஷன் தொகையை அதிகரிக்க முடியுமா?

ஒருவர் தான் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஆனால், வருடம் ஒரு முறை மட்டுமே இந்த வசதி அளிக்கப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் மாதந்தோறும் செலுத்தப்படும் சேமிப்புத் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

ரூ.10,000 பென்ஷன் தொகை எப்படி பெறலாம்?

இந்தத் திட்டத்தின் படி, 39 வயதுக்குட்பட்ட திருமணம் முடிந்த நபர்கள் இந்த அருமையான திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 30 அல்லது 30 வயதிற்கும் குறைவான வயதுடைய திருமணமான கணவன் – மனைவி இருப்பின், அவர்கள் மாதந்தோறும் ரூ.577-ஐ அடல் பென்சன் கணக்கில் செலுத்தலாம்.

அதே சமயம் கணவன்-மனைவியின் வயது 35 ஆக இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும், இந்தக் கணக்கில் ரூ. 902 போட வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் பங்குபெறும் நபர்கள் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து, அவர்களின் பென்சன் தொகை மாறுபடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Atal Pension Yojana Scheme 2022 | Atal Pension Yojana New Scheme | Atal Pension Yojana Plans | How to Change Atal Pension Yojana Scheme | How to Apply Atal Pension Yojana Scheme | Monthly Pension Scheme in Post Office in Tamil | Post Office monthly Pension Scheme in Tamil | Is there any Pension Scheme in Post Office | Monthly Pension Plan in Post Office | Pension Plan Scheme in Post Office | Old Age Pension Scheme in Post Office


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்