Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மாணவர்களே..! உங்களுக்கான புதிய அறிவிப்பு… கல்வி உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம்..? முழு விவரங்களும் இங்கே…

Gowthami Subramani [IST]
மாணவர்களே..! உங்களுக்கான புதிய அறிவிப்பு… கல்வி உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம்..? முழு விவரங்களும் இங்கே…Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு உதவித் திட்டங்களை அளித்து வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு சிறுபான்மையினருக்கான NSP மெட்ரிக் உதவித் தொகை திட்டம் 2022-23 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 11 ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரையிலான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் ஆகும். இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட குடியிருப்பு அரசு நிறுவனங்கள் மற்றும் தகுதியான தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அல்லது தனியார் பள்ளியில் படிப்பதற்காக மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த 2022-23 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை வழங்குதல் குறித்த அறிவிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதி

சிறுபான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

11, 12 ஆம் வகுப்பு, இளங்கலைப் பட்டம், முதுகலைப்பட்டம், தொழில்நுட்ப அல்லது தொழிற்கல்வி படிப்புகள், M.Phil அல்லது Ph.D பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

முந்தைய இறுதித் தேர்வில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்குச் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை

இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பின்வரும் வகையில் உதவித் தொகை வழங்கப்படும்.

உதவித் தொகை சேர்க்கை விகிதம்

கல்விக்கட்டணம்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

ரூ.7,000 (Both Hosteller & Day Scholar)

11 மற்றும் 12 நிலைகளின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி படிப்புகள் (ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருட கால படிப்புகள்)

ரூ.10,000 (Both Hosteller & Day Scholar)

UG மற்றும் PG

ரூ.3,000 (Both Hosteller & Day Scholar)

 

பராமரிப்பு கொடுப்பளவு

பராமரிப்பு கொடுப்பளவு

கட்டணம்

தொழில்நுட்ப அல்லது தொழில்கல்வி உட்பட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு

Hosteller: ரூ.380

Day Scholar: ரூ.230

இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் தொழில்நுட்ப கல்வி அல்லது தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர பிற படிப்புகள்

Hosteller: ரூ.570

Day Scholar: ரூ.300

M.Phil மற்றும் Ph.D படிப்புகளுக்கு

Hosteller: ரூ.1,200

Day Scholar: ரூ.550

 

தேவையான சான்றிதழ்கள்

  • இருப்பிட சான்றிதழ்
  • மாணவர் புகைப்படம்
  • மாணவரின் சிறுபான்மை சமூக சான்றிதழின் சுய அறிவிப்பு
  • முந்தைய கல்வி மதிப்பெண் தாளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
  • நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டண ரசீது
  • ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் அட்டை நகல்
  • நியமிக்கப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச அதிகாரிகளால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்
  • மாணவர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு அல்லது தாய்/ தந்தையுடன் கூட்டுக் கணக்கு இருப்பதற்கான சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறைகள்

மேலே கூறப்பட்ட தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் New Registration என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின், ஒரு பக்கம் தோன்றும். அந்தப் பக்கத்தில் Click here for other Scholarship Schemes hosted on NSP for AY 2022-23 என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படித்து, பின் பணியைத் தேர்ந்தெடுத்து மீதியைத் தொடர வேண்டும்.

அல்லது அந்தப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முறைகளிலேயே விண்ணப்பதாரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

NSP Scholarship 2022 Apply Online | NSP Scholarship 2022 Apply Online Last Date | NSP Scholarship 2022 Apply Online Login | NSP Scholarship 2022 Apply Online Status | NSP Scholarship 2022 Apply Online Date | NSP Scholarship 2022 Apply Online Status Check | NSP Scholarship 2022 23 Apply | NSP Portal | Post Matric Scholarship | NSP Login | NSP Scholarship Status | National Scholarship Portal new registration | National Scholarship Portal 2021 22 | NSP Scholarship 2021 22 Last Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்