Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OYO Hotels Latest News: OYO நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…! SEBI-யிடம் நிர்ணயித்த வேண்டுகோள்…!

Gowthami Subramani May 24, 2022 & 16:15 [IST]
OYO Hotels Latest News: OYO நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…! SEBI-யிடம் நிர்ணயித்த வேண்டுகோள்…!Representative Image.

OYO Hotels Latest News: சமீபத்தில், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கிய LIC-ன் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை ஆனதை அடுத்து, OYO நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

OYO அறிவிப்பு

OYO நிறுவனம் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்போம். பொதுமக்களுக்காக தங்கும் வசதியை ஏற்படுத்தக் கூடிய தளமாக ஓயோ நிறுவனம் உள்ளது. தற்போது, இந்த நிறுவனம், ஆரம்ப பொதுச் சலுகையை வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், அதன் ஒருங்கிணைந்த நிதித் தகவலைப் புதுப்பித்து மறுசீரமைக்கப்பட்டு உள்ளது.

ஆரம்ப காலத்தில், $11 பில்லியன் டாலரை இலக்காகக் கொனண்டிருந்தது. ஆனால், $7 முதல் $8 பில்லியன் வரையிலான மதிப்பிற்கு தீர்வு காண உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது (OYO Latest News).

SEBI (Security Exchange Board of India)-யிடம் வேண்டுகோள்

குறிப்பிடப்பட்ட ஆறு மாத காலங்களுக்கான நிதிநிலை அறிக்கைகளை மறு பரிசீலனை செய்யுமாறு அனுமதி கோரியுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, OYO நிறுவனம் ஐபிஓ -வைத் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான காரணம், நிதிச் செயல்பாட்டின் முன்னேற்றத்தினாலும், Market-ல் தற்போதைய நிலையற்ற தன்மையாலும் ஆகும்.

சமீபத்தில், புதிதாக பட்டியலிடப்பட்ட பங்குகளில் விலை சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இது பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், தகவல் புதுப்புத்தல் மற்றும் மறுசீரமைப்பு அதிக முன் பதிவுகளுக்கு வழிவகுக்கும் என கணக்கிட்டுள்ளது (Latest News About OYO).

முன்மொழியப்பட்ட IPO

OYO நிறுவனம் கடந்த 21 ஆண்டில் மட்டும் ரூ.1744.7 கோடி அளவிலான இழப்பைச் சந்தித்தது. மேலும், இதற்கு முன்னரே, OYO நிறுவனத்தின் IPO ஆனது, ரூ. 7,000 கோடி ரூபாய் வரையிலான பங்குகளின் புதிய வெளியீட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ரூ. 1,430 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கான சலுகையை உள்ளடக்கியது.

தற்போது, OYO நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரான Softbank நிறுவனம் அதனுடைய பங்குகளில் சுமார் 2 சதவீதத்தை விற்பனை செய்துள்ளது.

சந்தைப் பட்டியலில் IPO

சந்தைப் பட்டியலில், பங்குச் சந்தைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, அதன் இலக்கைக் குறைத்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தைகள், மிதமிஞ்சியதாக இருக்கின்றன. IPO-க்கள் அதிக மதிப்பீடுகள் அதிக சந்தாக்களைப் பெறுவதாக இருக்கின்றன. மேலும், இது போன்ற பல காரணங்களால், OYO நிறுவனம் IPO-வைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்