Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol Price Reduction Reason: யாரும் எதிர்பார்க்காத விலையில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை… சட்டெனக் குறையக் காரணம்.....

Gowthami Subramani May 24, 2022 & 10:45 [IST]
Petrol Price Reduction Reason: யாரும் எதிர்பார்க்காத விலையில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை… சட்டெனக் குறையக் காரணம்.....Representative Image.

Petrol Price Reduction Reason: கடந்த சில நாள்களாக, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை மெதுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறது.

பொருளாதாரச் சரிவு

சர்வதேச பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டி போட்டு அனைவரது வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது தான் கொரோனா எனும் பேரிடர். இந்த கொரோனா கால கட்டத்திலேயே, பெரும்பாலான மக்கள் பொருளாதாரங்களை அதிக அளவில் இழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த இன்னொரு பேரிடராகக் கருதப்படுவது உக்ரைன் – ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடந்த போர். இந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்த போர் காரணமாக, உலக நாடுகளில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து வந்த பற்றாக்குறை, வல்லரசு நாடுகளையும் பெரும் அளவில் பாதித்தது.

இலங்கைப் பதற்றம்

இவ்வாறு, சமீபத்தில் இலங்கையில் நடந்த பொருளாதார பிரச்சனைகள் அனைத்தையும் பற்றி, நாம் அனைவரும் அறிந்திருப்போம். நீண்ட நாள்களாக போராட்டங்களாக நிகழ்ந்த இலங்கைப் போர், போர்க் களம் போல காட்சியளிக்கும் வகையில், அமைந்து பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

வட்டி குறைப்பு

இதே சமயத்தில், சீனாவில் உற்பத்தித் துறையின் வட்டி குறைக்கப்பட்டது. இதனால், உபரியாக இருந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் விளைவைச் சந்திக்க நேர்ந்தது. சீனாவில், கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், கச்சா எண்ணெயின் டாலர் மதிப்பை உயர்த்தியுள்ளது.

அதிகரித்த பெட்ரோல் விலை

இத்தகைய சமயத்தில், இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகமான நிலையில், தற்போது மத்திய அரசு குறைத்து வருகிறது. இதற்கான காரணம் பணவீக்கம் என்று கூறப்படுகிறது. இலங்கையின் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவில் நிகழக் கூடாதென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு எரிபொருள் விலையைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை உயர்ந்த நிலையில், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வாங்கிய சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை