Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pension Scheme in Tamilnadu: மத்திய அரசின் நடவடிக்கை…! ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி…! என்ன காரணம் தெரியுமா..?

Gowthami Subramani June 29, 2022 & 15:45 [IST]
Pension Scheme in Tamilnadu: மத்திய அரசின் நடவடிக்கை…! ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி…! என்ன காரணம் தெரியுமா..?Representative Image.

Pension Scheme in Tamilnadu: மத்திய அரசு நடத்திய ஓய்வூதியதாரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் 300 க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

பென்சன் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் கடந்த சில ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன. மேலும், இது குறித்த விவரங்களை மத்திய அரசு பல்வேறு இடங்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு வருகிறது (Pension Scheme in Tamilnadu).

விழிப்புணர்வு கூட்டம்

அதன் படி, நேற்று புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள 300-க்கும் அதிகமாக ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக நலத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது (Tamilnadu Life Certificate).

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக, ஓய்வூதியதாரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படவில்லை. அதன் படி, கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பின்னர் தென்னிந்தியாவில் நடைபெறும் முதல் ஓய்வூதியதாரர் விழிப்புணர்வு கூட்டம் இந்த கூட்டம் ஆகும் (Tamilnadu Pension Life Certificate).

விழிப்புணர்வு திட்டங்கள்

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பென்சன் விதிமுறைகள், பென்சன் பெறுவதற்கான உரிமைகள், பென்சன் செயல்முறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இதற்கு முன்னரே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை (Digital Life Certificate) சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் படி, பென்சன் கொள்கைக்கான சீர்திருத்தங்கள், குடும்பத்திற்கான பென்சன் பற்றியும் பேசப்பட்டது. மேலும், வருமான வரி தொடர்பான விவரங்களும் விளக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்