Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol price today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!! இன்றும் மாற்றமில்லை..!!

Muthu Kumar June 18, 2022 & 11:30 [IST]
Petrol price today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!  இன்றும் மாற்றமில்லை..!!Representative Image.

Petrol price today : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் கடந்த 28 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 % சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதால் இந்தியாவில் இப்போதைக்கு போல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
அதன்படி, இன்றைய விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணையை வாங்கி வைத்து இருப்பதால் பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர்.

மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை நேற்று குறைந்தது. இதனையடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை