Petrol price today : சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது.
ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதால் இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 28 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை குறைந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…