Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து 43வது நாள்.. இன்றும் மாற்றமில்லை.. வாகன ஓட்டிகள் குஷி!!

Sekar July 03, 2022 & 08:23 [IST]
தொடர்ந்து 43வது நாள்.. இன்றும் மாற்றமில்லை.. வாகன ஓட்டிகள் குஷி!!Representative Image.

தொடர்ந்து 43வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

பெட்ரோல் டீசல் விலை சுமார் ரூ.70 முதல் 80 வரை இருந்த நிலையில், கொரோனா காலத்தில் விலை உயர்ந்து பல மாநிலங்களிலும் சதமடித்தன. 

எனினும் அதன் பின்னர் மத்திய அரசு கலால் வரி குறைப்பு, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் கொள்முதல் என எடுத்த நடவடிக்கைகளால் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயராமல் நிலைத்தன்மையுடன் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.94.24 என விற்பனையான நிலையில், இன்றும் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனையாகிறது.

மேலும் தொடர்ந்து 43வது நாளாக விலை உயராதது வாகன ஓட்டிகளிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை