Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Post Office Scheme in Tamil: மாதம் ரூ. 1400 சேமித்தால், ரூ. 35 லட்சம் கிடைக்குமாம்… போஸ்ட் ஆபிஸின் புதிய திட்டம்…. உடனே கிளம்புங்க….

Gowthami Subramani May 31, 2022 & 18:10 [IST]
Post Office Scheme in Tamil: மாதம் ரூ. 1400 சேமித்தால், ரூ. 35 லட்சம் கிடைக்குமாம்… போஸ்ட் ஆபிஸின் புதிய திட்டம்…. உடனே கிளம்புங்க….Representative Image.

Post Office Scheme in Tamil: போஸ்ட் ஆபிஸில் மாதந்தோறும் ரூ.1,400 சேமித்தால், 35 லட்சம் வரை பெறலாம் என திட்டம் ஒன்று வெளிவந்துள்ளது (Gram Suraksha Scheme Post Office in Tamil).

மக்களின் நலனுக்காக, போஸ்ட் ஆபிஸ் சேமிப்பில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று தான், கிராம சுரக்ஷா யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், எவ்வாறு முதலீடு செய்யலாம்..? நாம் செய்யும் முதலீட்டால் வரும் லாபம் எவ்வளவு..? போன்ற அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம் (Post Office Scheme in Tamil).

கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் (Gram Suraksha Scheme)

அஞ்சல் சேமிப்புத் திட்டங்களிலேயே, இந்தத் திட்டம் சிறப்பான திட்டமாகக் கருதப்படுகிறது. குறைந்த அளவில் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் (Post Office Monthly Income Scheme).

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் நபர், மாதம் ரூ. 1411 முதலீடு செய்ய வேண்டும். மேலும், இதன் மூலம், முதிர்வு காலத்தில் அவரது வருவாயாக சுமார் ரூ. 35 லட்சம் தொகையைப் பெறலாம். அதன் படி, சிறிய அளவிலான முதலீட்டில், மிகப் பெரிய தொகையை வருவாயாகப் பெறலாம். மேலும், இந்தத் திட்டம் ஒரு சிறந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். பெரும்பாலும், இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்காக, குறிப்பாக பெண்களுக்கும், பின் தங்கிய மக்களுக்கும் உதவும் நோக்கில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும் (New Interest Rates on Post Office Schemes).


Representative Image. அஞ்சல் துறையில் இத்தனை திட்டங்களா….? அதிலும் ஏன் இந்தக் காப்பீட்டில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்….?


சில குறிப்புகள்

இந்தப் பாலிசியில் கலந்து கொண்ட பிறகு, ஐந்தாண்டுகளின் முடிவில் Endowment Assurance பாலிசியாக மாற்றும் கூடுதல் வசதியும் இதில் உண்டு. இத்திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 19 முதல் 55 ஆண்டுகள் ஆகும் (Grama Suraksha Scheme).

மேலும், இத்திட்டத்தில், ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் ப்ரீமியத்தில் தொகை செலுத்தும் வசதியும் உண்டு. அதாவது, இத்திட்டத்தில் பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாத காலங்கள் மற்றும் ஆண்டின் அடிப்படையில் தொகை செலுத்தலாம் (Grama Suraksha Scheme Eligibility).

மேற்குறிப்பிட்ட ஆரம்ப வயதான 19 வயதில் தொடங்கி, ரூ. 10 லட்சத்தைப் பெற விரும்புபவர்கள் மாதாந்திரம் செலுத்தும் தொகை மாறுபடும் (Grama Suraksha Scheme in Tamil). இந்த 10 லட்சம் தொகையைப் பெறுவதற்கான பாலிஸியில், ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, மாதந்திரம் செலுத்த வேண்டிய தொகை குறையும் (Grama Suraksha Scheme Post Office).

 

வயது மற்றும் தொகை செலுத்த வேண்டிய ஆண்டுகள்

பிரீமியம் டெபாசிட்டில் செலுத்த வேண்டிய தொகை (மாதந்தோறும்)

குறிப்பிடப்பட்ட காலத்திற்குப் பிறகு பெறப்படும் தொகை

முதலீட்டாளர்கள் 55 வயது வரை ரூ. 10 லட்சம் முதலீட்டைப் பெற விரும்பினால்,

ரூ.1,515

ரூ.31.60 லட்சம்

முதலீட்டாளர்கள் 58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால்,

ரூ. 1,463

ரூ.33.40 லட்சம்

முதலீட்டாளர்கள் 60 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால்,

ரூ. 1,411

ரூ.34.60 லட்சம்


Representative Image. பிரமத மந்திரியின் அமோக திட்டம்… விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.18,000 கோடி….! இத மட்டும் பண்ணுங்க.


இதில், கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தத் திட்டத்தைப் பொறுத்த வரை, 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் சலுகை அளிக்கப்படும் (Grama Suraksha Yojana Apply Online).

இதனையடுத்து, அவசர காலங்களில் 30 நாள்கள் சலுகைக் காலம் அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரங்களில், முதலீடு செய்த நாளில் இருந்து பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சரண்டர் செய்யலாம்.

முக்கிய குறிப்பு: இந்த கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் பங்கு பெறுபவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே, சேமிப்பை மூடினால், போனஸ் பெறுவதற்குத் தகுதியில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்