Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kisan Yojana Samman Nidhi in Tamil: பிரமத மந்திரியின் அமோக திட்டம்… விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.18,000 கோடி….! இத மட்டும் பண்ணுங்க.

Gowthami Subramani [IST]
Kisan Yojana Samman Nidhi in Tamil: பிரமத மந்திரியின் அமோக திட்டம்… விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.18,000 கோடி….! இத மட்டும் பண்ணுங்க.Representative Image.

Kisan Yojana Samman Nidhi in Tamil: மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் மக்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதில், விவசாயம், பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்த திட்டமாகும்.

விவசாயிகளுக்கான திட்டம்

இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வருமான ஆதரவை வழங்கக் கூடியதாகும். இந்த திட்டம் முதலில் Rythu Bandhu திட்டமாக, தெலுங்கானா அரசால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வகுத்துள்ள வரையறையின் படி, குறிப்பிடப்பட்ட தொகை, தகுதியுள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது (PM Kisan Samman Nidhi Yojana Scheme).

அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள், இந்தியாவின் இடைக்கால யூனியன் பட்ஜெட்டில், தெலுங்கானா அறிமுகப்படுத்திய இத்திட்டத்தை நாடு தழுவிய திட்டமாக செயல்படுத்துவதாக பியூஷ் கோயல் அறிவித்தார். பின்னர், அதே மாதம் 24 ஆம் நாள் அன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் இத்திட்டத்தைத் தொடங்கினார். ஆண்டு வருமானமாக, ரூ. 6,000 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளின் அக்கவுண்டில் பணம் செலுத்தப்படும்.

முக்கிய அம்சங்கள்

விவசாயிகளுக்கான பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் இயங்கக் கூடிய இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (PM Kisan Nidhi Yojana).

திட்டத்தின் பெயர்

PM–KISAN Yojana (பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா)

தொடங்கப்பட்ட நாள்

பிப்ரவரி 24, 2019

அரசாங்க அமைச்சகம் (Government Ministry)

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://pmkisan.gov.in/

 

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தகுதியுடைய அனைத்து நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வருமானத்தைப் பெருக்குவதற்காக அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் சரியான விளைச்சலை உறுதி செய்வதற்காக உள்ளீடுகளை வாங்குதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

தகுதி

மத்திய அரசின், இத்திட்டத்தின் கீழ் தகுதி அளிக்கப்படாத பயனாளிகளின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Kisan Samman Nidhi Eligibility).

  • அரசியலமைப்புப் பதவிகளை முன்னாள் மற்றும் தற்போது வைத்திருப்பவர்கள்
  • மாநில, மாவட்ட அளவிலான முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், மேயர்கள், தலைவர்கள் போன்றோர்.
  • மத்திய/ மாநில அரசு அமைச்சகங்கள் அல்லது அலுவலகங்கள் அல்லது துறைகளின் கீழ் பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாற்றக் கூடிய அதிகாரிகள்
  • மாத ஓய்வூதியமாக ரூ. 10,000 வாங்குபவர்கள் மற்றும் மேற்கண்ட துறையில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்
  • கடந்த மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி செலுத்திய நபர்கள்.
  • பொறியாளர், மருத்துவர், பட்டயக் கணக்காளர், கட்டிடக் கலைஞர் போன்ற வல்லுநர்கள்.

மேற்கூறியவற்றில் அடங்குபவர்கள், இந்த திட்டத்தில் பங்கு பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள், கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் (Kisan Samaan Nidhi).

  • குடியுரிமை சான்றிதழ்
  • நிலம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள்
  • ஆதார் அட்டை
  • வங்கி கணக்கு விவரங்கள்

திட்டத்தின் நன்மைகள்

  • இத்திட்டத்தின் மூலம், நேரடி நிதி பரிமாற்றம் செய்யப்படும்.
  • டிஜிட்டல் தளத்தில் அதிகாரப்பூர்வமாக விவசாயிகள் தொடர்பான அனைத்து விவரங்களும் பதிவாகியுள்ளன. இதனால், பதிவு மற்றும் நிதி பரிமாற்றத்தை எளிதாக்க முடியும்.
  • இந்த டிஜிட்டல் தளத்தின் பதிவுகள், நலத்திட்டத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டு வந்துள்ளன.
  • மேலும், இந்தத் திட்டம் விவசாயிகளின் பொருளாதாரத் தடைகளை எளிதாக்குகிறது. மேலும், இத்திட்டம் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு பாரபட்சமும் பார்ப்பது இல்லை.

பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பங்கு பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்