Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Cares for Children Scheme: குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை…! பிரதமரின் முக்கிய அறிவிப்பு…!

Gowthami Subramani May 30, 2022 & 11:45 [IST]
PM Cares for Children Scheme: குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை…! பிரதமரின் முக்கிய அறிவிப்பு…!Representative Image.

PM Cares for Children Scheme: கொரோனா தொற்றால், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம் இன்று செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய திட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா எனும் பேரிடரால், ஏராளக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள், ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களையோ, பாதுகாவலர்களையோ இழந்து தவித்துக் கொண்டு வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் பி.எம்.கிசான் கேர்ஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது (PM Cares for Children Scheme).

இந்த பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ், குழந்தைகள் பயனடைய மே மாதம் 30 ஆம் நாள் காலை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி வழியாக பிரதமர் மோடி வழங்குகிறார் என்று அறிவிப்புகள் வெளியாகின. இத்திட்டத்தின் மூலம், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது (PM Cares for Children Scheme).


Representative Image.  ஷேர் மார்க்கெட்-ல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா..? அப்ப மொதல்ல இத செக் பண்ணுங்க…..


திட்டத்தின் பயன்கள் (PM Cares Fund Benefits)

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொக வழங்குகிறார். மேலும், இத்திட்டத்தில் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும், ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (PM Cares Fund).

ஆண்டு காலம் (PM Cares Fund Plan)

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற்றுக் கொள்ளும் குழந்தைகள், மார்ச் 11, 2020 ஆம் நாள் முதல் பிப்ரவரி மாதம் 28, 2022 ஆம் நாள் வரை கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையோ அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, தத்தெடுத்த பாதுகாவலரையோ, சட்டரீதியான பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இத்திட்டம் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது (PM Cares Fund Plan).


Representative Image.  அரசு வெளியிட்ட புதிய திட்டம்…! இனி விவசாயிகளுக்குக் கவலை இல்லை…!


திட்டத்தின் முக்கிய நோக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளுக்கு விரிவான பாதுகாப்பு வழங்குதல், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித் தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், போன்றவற்றைத் தருவதாகும். மேலும், குழந்தைகளுக்குத் தன்னிறைவு அளிப்பதற்காக, அவர்களது 23 வயது வரை, ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவக் காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்வது போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது (PM Care Fund Address).

குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படக் கூடிய இந்தத் திட்டத்தில் குழந்தைகல் பதிவு செய்வதற்காக https://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது.

தற்போது, கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்று வழங்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்