Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ration Card Address Change Online: ஆன்லைனில் ஈஸியா ரேஷன் அட்டையின் முகவரியை மாற்றலாம்…! இத மட்டும் பண்ணுங்க போதும்…

Gowthami Subramani July 12, 2022 & 16:30 [IST]
Ration Card Address Change Online: ஆன்லைனில் ஈஸியா ரேஷன் அட்டையின் முகவரியை மாற்றலாம்…! இத மட்டும் பண்ணுங்க போதும்…Representative Image.

Ration Card Address Change Online: ஆன்லைன் மூலம் குடும்ப அட்டையில் உள்ள முகவரியை எளிதாக மாற்றம் செய்யலாம். அதற்கான சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த முறைகளைப் பயன்படுத்தி முகவரியை எளிதாக மாற்றலாம்.

குடும்ப அட்டை

குடும்ப அட்டை என்பது ஒருவரது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசு வழங்கிய ஒரு சிறப்பான திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் படி, பொதுமக்களுக்கு இலவசமாக அல்லது மலிவான விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மக்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

முகவரி மாற்றம்

அவ்வாறு மக்களுக்குக் கிடைக்கக்கூடிய இந்த சிறப்பான திட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் அவர்களுக்குப் பயனுள்ளவையாகவே இருக்கின்றன. அதன் படி, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றங்களை எளிதாக முறையில் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வகையில், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஆன்லைனில் ரேஷன் கார்டு முகவரியை மாற்றுவது எப்படி?

இதில், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றும் முறைகளைக் காணலாம்.

ஆன்லைன் மூலம் குடும்ப அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவதற்கு முதலில் குடும்ப அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

முகவரி மாற்ற முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளமான https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதன் முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற தலைப்பு ஒன்று இருக்கும்.

Graphical user interface, website

Description automatically generated

அதன் கீழ், முகவரி மாற்றம் செய்ய என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Graphical user interface, text, website

Description automatically generated

க்ளிக் செய்தவுடன், ஒரு பக்கம் திறக்கும். அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு பதிவு செய் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Graphical user interface, text, application

Description automatically generated

அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.

அந்த OTP-ஐ உள்ளிட்டு பின், பதிவு செய் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, பதிவு செய்த உடன் அட்டை தொடர்பான சேவைக்கு என்ற தலைப்பில் ஒரு படிவம் திறக்கும்.

அதில், கேட்கப்பட்டுள்ள கடையின் பெயர், உறுப்பினர் பெயர், குடும்ப அட்டையின் எண், மற்றும் தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

Graphical user interface, text, application

Description automatically generated

அதன் பிறகு, புதிய முகவரி விவரங்கள் என்ற இடத்தில் குடும்ப உறுப்பினர் அட்டையில் சேர்க்கப்பட வேண்டிய புதிய முகவரியை உள்ளிட வேண்டும்.

பின், ஆவண வகையைத் தேர்ந்தெடுக்கவும் என்ற தலைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் Choose File என்பதைக் க்ளிக் செய்து புதிய முகவரி விபரங்கள் அடங்கிய ஆவணச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு, விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து, அனைத்தும் சரியாக இருப்பின் உறுதிபடுத்துதல் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Graphical user interface, text, application

Description automatically generated

பின், பதிவு செய்ய என்பதை க்ளிக் செய்தால், முகவரி மாற்றத்திற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு செய்த பிறகு, மொபைல் எண்ணிற்கு ஒரு குறிப்பு எண் ஒன்று அனுப்பப்படும். இந்த குறிப்பு எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணைக் கொண்டு அட்டை தொடர்பான சேவை நிலையை அறிந்து கொள்ளலாம்.

அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகளின் கீழ் அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Graphical user interface, website

Description automatically generated

இவ்வாறு, எளிமையான முறையில் ஆன்லைனிலேயே ரேஷன் கார்டில் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Ration Card Address Change Online | How to Change Address in Ration Card | Address Change in Ration Card | How to Change Address in Ration Card in Tamil | How to Change Address in Ration Card in Tamilnadu | How to Change the Address in Ration Card Online Near Erode Tamil nadu | How to Change the Address in Ration Card Online Near Bhavani Tamil nadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்