Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ration Card Latest News in Tamil: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்….! இனி இலவசப் பொருள் இல்லை....!

Gowthami Subramani June 19, 2022 & 16:25 [IST]
Ration Card Latest News in Tamil: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்….! இனி இலவசப் பொருள் இல்லை....!Representative Image.

Ration Card Latest News in Tamil: ரேஷன் கார்டு உதவியின் மூலம் இலவசமாக உணவுப் பொருள்களை வாங்கும் நபர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

ரேஷன் கார்டு திட்டம்

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாகக் கிடைப்பதற்காக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அற்புத திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் மலிவான விலையில் பொருள்களை வாங்க முடியும். மேலும், இதற்கு அடுத்தபடியாக நிதியுதவி போன்ற அரசின் உதவித் திட்டங்களும் மூலமாகவே பொது மக்களுக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

இலவசப் பொருள்கள்

இவ்வாறு ரேஷன் கார்டு மூலம் பொருள்களைப் பெறக்கூடிய பயனாளியாக இருப்பின் அவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசி இந்த முடிவால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம். அதன் படி, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா என்ற திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். ஆனால், இதில் பயனாளிகளுக்கு கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது.

கோதுமைக்குப் பதில் அரிசி

இதுவரை, பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசி மற்றும் 3 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் உணவுப் பொருள்கள் வழங்கும் துறை ஆணையர் பிறப்பித்த அறிவிப்பின் படி, இந்த முறை 3 கிலோ கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், உத்திரப் பிரதேச அரசுடன் சேர்ந்து இன்னும் சில மாநிலங்களில் கோதுமை விற்பனையைக் குறைப்பதற்காக அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் பொருள்களை எப்படி பெறலாம்?

ஆதார் அங்கீகாரம் மூலம் உணவு தானியங்களை வாங்க முடியாத நபர்களுக்கு மொபைல் ஓடிபி மூலம் சரிபார்க்கப்பட்டு ஜூன் 30 ஆம் தேதி அரிசி விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை தட்டுப்பாடு

மேலும், நாட்டில் தற்போது கோதுமை வரத்து குறைந்து காணப்படுகிறது. ரேஷன் ஒதுக்கீட்டில் இலவசமாக அளிக்கப்படும் கோதுமையின் வரத்து குறைந்துள்ளது. அதன் படி, ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவைக் குறைப்பதற்கான முடிவை அரசு எடுத்துள்ளது.

அதன் படி, இந்தக் கட்டுப்பாடு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்குப் பொருந்தக்கூடியதாக அமைகிறது. மேலும், கோதுமைக்குப் பதிலாக 55 லட்சம் மெட்ரின் டன் அரிசியைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்