Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாதத்தில் உயரும் வட்டி விகிதம்…? ரிசர்வ் வங்கி வெளியிட்ட பகீர் அறிவிப்பு..

Gowthami Subramani August 03, 2022 & 10:30 [IST]
இந்த மாதத்தில் உயரும் வட்டி விகிதம்…? ரிசர்வ் வங்கி வெளியிட்ட பகீர் அறிவிப்பு..Representative Image.

இந்திய பொருளாதாரத்தில் உயரும் பணவீக்கம் காரணமாக, நாட்டில் விலைவாசி உயர்வு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல, வங்கிகளில் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

அதன் படி, இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த முக்கிய விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். ஆனால், மத்திய வங்கியின் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் RBI-இன் நடவடிக்கை அளவு குறித்த கருத்துகள் வெளியிடப்படவில்லை.

பொருளாதார கணிப்புகள்

கடந்த ஜூன் 2022-ற்கான எடுக்கப்பட்ட கொள்கையின் படி RBI கணிப்பு 2023 ஆம் ஆண்டின் 3-ஆம் காலாண்டில் 6%-ற்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. மேலும், நான்காம் காலாண்டிற்ல் 6%-ற்கும் கீழே குறையும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அதன் படி, இந்த 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கத்தை 6.7%-ஆகக் கணித்துள்ளது. அதன் படி, முதல் காலாண்டில் 7.5%-ஆகவும், இரண்டாம் காலாண்டில் 7.4%-ஆகவும், மூன்று மற்றும் நான்காம் காலாண்டு முறையே 6.2% மற்றும் 5.8% ஆக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதற்கு காரணம் சாதாரண பருவமழை மற்றும் கச்சா எண்ணெயின் சராசரி விலையைப் பொறுத்து அமைகிறது.

பணவீக்கத்தைக் குறைக்க

இவ்வாறு பொருளாதார பிரச்சனையைக் குறைப்பதற்கும், பணவீக்கத்தை குறைப்பதற்கும், மே மாதத்தில் மட்டுமே விகிதங்களை உயர்த்திய RBI, அடுத்தடுத்து உயர்வுகளை அமல்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

ரெப்போ ரேட் உயர்வு

63 பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின் படி, 40%-ற்கும் அதிகமானோர் அதாவது 26 பேர் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளி உயர்விலிருந்து 50bps-உயர்வுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், 63 பேரில் 20 பேர் சிறிய அளவிலான உயர்வு அதாவது 35bps ஆக உயரும் என கணித்தனர். அதே போல, 63 பேரில் 3 பேர் 40bps மற்றும் 63-ல் 14 பேர் 25bps ஆக உயரும் என கணித்துள்ளனர்.

செப்டம்பர் முதல்

இவ்வாறு, தொடர்ந்து வரும் வட்டி விகிதம், பண வீக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். பண வீக்கம் மற்றும் வளர்ச்சி வேகம் தணிந்தால், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து விகித உயர்வின் வேகம் குறைக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும் விலைவாசி உயர்வைத் தொடர்ந்து உயர்ந்து வரும் வட்டி விகிதத்தால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Bank Interest Rate Increases in August | Bank Interest Rate Increases in August 2022 | RBI Interest Rate 2022 | Current Bank Rate 2022 | RBI Rate Hike Meeting | RBI Rate Hike August  | 2022 | Repo Rate | Repo Rate Hike


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்