Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி ரேஷன் கடைகளில் சிலிண்டர்... இனி எதுக்கு கவலை...! அரசின் அசத்தல் திட்டம்..

Gowthami Subramani October 06, 2022 & 12:45 [IST]
இனி ரேஷன் கடைகளில் சிலிண்டர்... இனி எதுக்கு கவலை...! அரசின் அசத்தல் திட்டம்..Representative Image.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை அமல்படுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்களை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. அதன் படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 எடை கொண்ட சிலிண்டர், மற்றும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கு வாங்கபப்டும் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பயனர்களின் இருப்பிடச் சான்றிதழ் அவசியமாகிறது. மேலும், கல்வி, வேலை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கின்றனர். இந்த சமயத்தில், சிலிண்டர் பெறுவதற்காக பலருக்கு முறையான முகவரி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் உள்ளது.

இதனால், அவர்களது நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த எடையிலான சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி வெளியிட்டிருந்தார்.

இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. அதன் படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில், சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில், ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், நுகர்வோர்கள் 2 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களை பெற முடியும். மேலும், இரண்டு கிலோ கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு ரூ.958ம், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு ரூ.1515ம் செலுத்த வேண்டும்.

அதன் பின்னர், கேஸ் சிலிண்டர் காலியான பின்னர், நிரப்பப்பட்ட சிலிண்டரைப் பெறுவதற்கு அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. அதன் படி, சென்னையில், இந்த மாதத்தில், ஐந்து கிலோ சிலிண்டர் விலை ரூ.575 மற்றும் இரண்டு கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 என விற்பனை செய்யப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்