Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

RBI hikes Repo Rate : ஆர்பிஐ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ சந்தாதாரர்கள் ஷாக்!!

Sekar June 08, 2022 & 11:45 [IST]
RBI hikes Repo Rate : ஆர்பிஐ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ சந்தாதாரர்கள் ஷாக்!!Representative Image.

RBI hikes Repo Rate : பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு. அதன்படி, தற்போது ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாக உள்ளது. இது வங்கிகளின் வட்டி விகிதத்தில் எதிரொலிக்கும் என்பதால் இனி இஎம்ஐ சந்தாதாரர்கள் அதிக வட்டி செலுத்தும் நிலை ஏற்படலாம்.

செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணவியல் கொள்கைக் குழுவின் (எம்பிசி) ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித உயர்வுக்கு ஏகமனதாக வாக்களித்தனர் என்றும் ரெப்போ விகிதம் தொடர்ந்து தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கும் கீழேயே உள்ளது என்றும் கூறினார்.

ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு ஆர்பி கொடுக்கும் கடன் மீதான வட்டி விகிதமாகும். அதே சமயம் ரொக்க இருப்பு விகிதம் (CRR) என்பது வங்கிகள் ஆர்பிஐயில் இருப்புக்களாக டெபாசிட் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையாகும்.

முன்னதாக கடந்த மாதம், சக்தி காந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு, சுழற்சி இல்லாத பணவியல் கொள்கை மதிப்பாய்வில், சுழல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகிதம் அல்லது குறுகிய கால கடன் விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. ஆகஸ்ட் 2018 க்குப் பிறகு இது முதல் விகித உயர்வு ஆகும். மேலும் ரொக்க இருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து 4.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

அதிகரித்த பணவீக்கம்

உக்ரைனில் நடந்த போர் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்தது என்று சக்திகாந்த தாஸ் கூறினார். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறிய அவர் மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிவித்தார்.

நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் ​​அக்டோபர் 2021 முதல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இது 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்