Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SIP Investment India: எஸ்.ஐ.பி-ல் ஃபண்ட் தொகை இவ்வளவா..? எல்லோரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..?

Gowthami Subramani June 07, 2022 & 15:45 [IST]
SIP Investment India: எஸ்.ஐ.பி-ல் ஃபண்ட் தொகை இவ்வளவா..? எல்லோரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..?Representative Image.

SIP Investment India: SIP இன்வெஸ்ட்மென்ட் என்பது முதலீடு செய்யக் கூடிய ஒன்றாகும். இதில் இன்வெஸ்ட் செய்யும் முதலீட்டாளர்கள், தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிதிகளில், ஒரு முதலீட்டாளர் SIP-ஐத் தொடங்குவதால், அவர்கள் தொகுப்பாக வைத்திருக்கும் ஸ்டாக்ஸ், பாண்ட்ஸ், தொகை போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், முதலீடுகள், குறிப்பிட்ட நிதிகளில், அவர்களின் வருமானத்திலிருந்து கழிக்கத் தகுதியுடையவையாகும்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட்

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்றழைக்கப்படும் SIP, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு நிர்வகிக்கக் கூடிய தொகையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது (SIP Investment Details).

அதன் படி, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,27,832 கோடி SIP ஃபண்ட் கிடைத்துள்ளது (Mutual Fund Details).

மாதவாரியாக 2021 ஆம் ஆண்டிற்கான SIP தொகை

கடந்த 2021 ஆம் ஆண்டின் மாத வாரியாகக் கிடைத்த SIP தொகை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (SIP Investment of Year 2021).

மே – ரூ. 8,819 கோடி

ஜூன் – ரூ. 9,155 கோடி

ஜூலை – ரூ. 9,609 கோடி

ஆகஸ்ட் – ரூ. 9,923 கோடி

செப்டம்பர் – ரூ. 10,351 கோடி

அக்டோபர் – ரூ. 10,519 கோடி.

நவம்பர் – ரூ. 11,005 கோடி

டிசம்பர் – ரூ. 11,305 கோடி

மாதவாரியாக 2022 ஆம் ஆண்டிற்கான SIP தொகை

2022 ஆம் ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஃபண்ட் விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன (SIP Investment of Year 2022).

ஜனவரி – ரூ. 11,517 கோடி

பிப்ரவரி – ரூ. 11,438 கோடி

மார்ச் – ரூ. 12,328 கோடி

ஏப்ரல் – ரூ. 11,863 கோடி

இவ்வாறு ஒவ்வொரு மாதமும், முதலீடு செய்யப்பட்ட தொகை அதிகமடைந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம், SIP எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஆகும்.

இதில், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 10,059 கோடி ஆகும். இதே சமயத்தில் SIP முறையில் இல்லாமல், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் மட்டும் ரூ.22,557.59 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Stock Market Investments).

அறிக்கையின் படி, கடந்த ஏப்ரலில் SIP முறை இல்லாமல், ரூ. 7,43,244.06 கோடியும், SIP முறையைப் பயன்படுத்தி ரூ. 362.41 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹைபிரிட் பண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் SIP இல்லாமல் ரூ. 18,461.13 கோடியும், SIP முறையில் ரூ. 761.12 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான மொத்த முதலீடுகளைக் கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் காணலாம் (Investment of This Year).

Table

Description automatically generated

SIP முதலீடு. எந்த வகையில் ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடுகள்?

பங்குச் சந்தை சாராத திட்டங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 70,532 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத நிலவரத்தின் படி, ரூ. 1,60,300 கோடி தொகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

இதில் இந்திய அளவிலான மியூச்சுவல் ஃபண்ட் மதிப்பு ரூ. 38,03,683 கோடியாக உள்ளது. இதில் பார்க்கும் போது, தமிழ்நாட்டின் பங்களிப்பு வெறும் 4.2% மட்டுமே உள்ளது. மேலும், வருங்காலங்களில் இன்னும் அதிகமானோர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் SIP முதலீடு மற்றும் SIP முதலீடு இல்லாத இரண்டிலும் உள்ள ஃபண்டுகளைத் தெரிந்து கொண்டோம். இது போன்ற, மேலும் சில வணிகம் தொடர்பான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள searcharoundweb என்ற இணையதளத்தில் காணுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்