Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த வங்கிகளில் பணம் வச்சுருக்கீங்களா.. உஷார் மக்களே.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை!!

Sekar July 23, 2022 & 12:21 [IST]
இந்த வங்கிகளில் பணம் வச்சுருக்கீங்களா.. உஷார் மக்களே.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை!!Representative Image.

நான்கு கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்த வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, மேற்குவங்கத்தின் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட் மற்றும் உத்தரபிரதேசத்தின் நேஷனல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட் ஆகியவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி சாய்பாபா ஜனதா சககாரி வங்கியின் டெபாசிட் செய்தவர்கள் வங்கியில் இருந்து 20,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது. அதே சமயம் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கியில் இது 50,000 ரூபாயாகவும், நேஷனல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கியில் ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரிசர்வ் வங்கி உத்தரபிரதேசத்தின் மற்றொரு கூட்டுறவு வங்கியான யுனைடெட் இந்தியா கோ-ஆபரேடிவ் வங்கியின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் கீழ், நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். கூட்டுறவு வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப்ஐக்கள் மூலம் மோசடிகள் வகைப்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான சில விதிமுறைகளை மீறியதற்காக சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கு ரூ.57.75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்