Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Repo Interest Rate Effects on Child Scheme in India: ரெப்போ வட்டி விகிதத்தால், செல்வமகள் சேமிப்பு திட்டத்திலும் மாற்றம்…! என்ன தெரியுமா..?

Gowthami Subramani June 20, 2022 & 13:30 [IST]
Repo Interest Rate Effects on Child Scheme in India: ரெப்போ வட்டி விகிதத்தால், செல்வமகள் சேமிப்பு திட்டத்திலும் மாற்றம்…! என்ன தெரியுமா..?Representative Image.

Repo Interest Rate Effects on Child Scheme in India: சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெபாசிட் செய்தவர்களுக்கு, வங்கிகளில் வட்டி விகிதம் போன்றவற்றிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது (Repo Interest Rate Effects).

ரெப்போ வட்டி விகித உயர்வு

ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கிகள் 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு காரணமாக, வங்கிகள், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கும் வட்டி விகிதங்களை உயர்த்திக் கொண்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே (Repo Interest Rate Effects on Child Scheme in India).

செல்வமகள் சேமிப்பு திட்டம்

இந்திய மக்களால் பெரிதும் கவரப்பட்டு, செயல்பட்டு வருவது செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகளுக்கானத் தேவையான கல்வி, திருமணம் போன்ற முக்கிய செலவுக்காக பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் எவரையும் சாராமல் இருக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டதாகும் (Repo Interest Rate Effects on Child Scheme in India). இது ஒரு பாதுகாப்பாக முதலீடு செய்யும் இடமாகவும், சிறந்த சேமிப்பு திட்டம் என்பதாலும், பெண் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் இந்த சிறப்பான திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.

வட்டி விகிதம்

இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி பெண்களுக்கு வழங்கப்படுகிறது (RBI Repo Rate 2022).

முதலீடு செய்தல்

மத்திய அரசு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. மேலும், இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் அதிக வட்டி என்பதால் பெரும்பலான பெற்றோர்கள் அதிகளவில் இந்தத் திட்டத்திலேயே முதலீடு செய்கின்றனர். இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே நல்ல விழிப்புணர்வைத் தருகிறது. தபால் நிலையங்கள், பொதுத் துறை வங்கிகள் மூலம் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிக்கலாம் (Sukanya Samriddhi Yojana Scheme Interest Rate Update 2022).

ரெப்போ வட்டி விகிதத்தால்

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததினால் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட ஒரு சில அரசு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது (Repo Interest Rate Increases 2022).

அதன் படி, தற்போது செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 7.6% வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், 8.00% அல்லது 8.10% ஆக மாற அதிக அளவு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்