Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதியோர்களுக்கான உதவித் தொகை நிறுத்தம்…? வெளிவந்த அதிர்ச்சி தகவல்….

Gowthami Subramani September 08, 2022 & 18:40 [IST]
முதியோர்களுக்கான உதவித் தொகை நிறுத்தம்…? வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. Representative Image.

தமிழ்நாட்டில், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை திட்டம் நிறுத்தப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

முதியோர் உதவித் தொகை திட்டம்

தமிழகத்தில், உணவுக்கு வழி இல்லாமல் வசிக்கக் கூடிய முதியவர்களுக்கு, அவர்களின் துன்பத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், “தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்” ஆகும். இந்த திட்டத்தின் கீழ், முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதிருப்தியில் மக்கள்

இந்த சூழ்நிலையில் முதியோர் உதவித் தொகை ரத்து செய்யப்பட போவதாக, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்த தகவலால் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதியோர்களுக்கான ஓய்வூதியத்தொகை ரூ.20-லிருந்து தொடங்கப்பட்டது எனவும், முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டில் ரூ.500 இருந்த நிலையில் ஓய்வூதியத் தொகையை ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளார். மேலும், தகுதி வாய்ந்த நபர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், ஆயுள் முழுவதும் ஊதியத் தொகை வழங்குவேன்” என கூறினார்.

இவர்களுக்கு மட்டுமே

ஆனால், தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் முதியோர் உதவித் தொகை ரத்து செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறிய போது, “ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குவது ஆகும்.

எனவே, இந்த திட்டத்தில் பயன் பெறுவர்களுக்கு ஏதேனும் சொத்துகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பின், அவர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, சொந்த வீடு வைத்திருப்பவர்கள், மகன் அல்லது மகள்கள் வீட்டில் வசிப்பவர்கள், வசதியுடன் இருப்பவர்கள் நிதியுதவி பெற்று வருகிறார்கள் எனும் போது அவர்களுக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், மகன், மகள்கள் இருப்பினும், அவரவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்டவை குறித்தே எண்ணுகின்றனரே தவிர பெற்றோர்களைக் கண்டு கொள்வதில்லை. இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு உதவித் தொகை நிறுத்துவது என்ன நியாயம்? என முதியோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்