Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீன ஆன்லைன் லோன் ஆப் மோசடி.. சிக்கிய Paytm உள்ளிட்ட ஆப்ஸ்.. ED வைத்த ஆப்பு.. வெளிவந்த பரபரப்பு தகவல்கள்!!

Gowthami Subramani September 16, 2022 & 14:15 [IST]
சீன ஆன்லைன் லோன் ஆப் மோசடி.. சிக்கிய Paytm உள்ளிட்ட ஆப்ஸ்.. ED வைத்த ஆப்பு.. வெளிவந்த பரபரப்பு தகவல்கள்!!Representative Image.

சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய சட்டவிரோத கடன் செயலிகளுக்கு எதிரான மிகப்பெரும் நடவடிக்கையாக Easebuzz, Razorpay, Paytm பேமென்ட் கேட்வேகளில் உள்ள ரூ.46.67 கோடி மதிப்பிலான நிதி தற்போது அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் வழங்கும் செயலிகள்

நாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் வளர வளர, அதன் விளைவுகளும் அதிகமாகி வந்து கொண்டிருக்கிறது. அதன் படி, நேரில் கடன் வாங்குவது சென்று, தற்போது அறியாத நபர்களிடமிருந்து மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்குகின்றனர். அந்த வகையில் சீன கடன் செயலிகள் மோசடி கொரோனா ஊரடங்கின்போது அதிகரித்தது.

சீன கடன் செயலி வழக்கு

இது குறித்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, இந்தியாவின் முக்கிய இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் சோதனைகள் நடத்தப்பட்டது. அதன் படி, டெல்லி, குருகிராம், புனே, சென்னை, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்தது.

பண மோசடி வழக்கு

அதன் படி, கடந்த 2021 ஆம் ஆண்டு பண மோசடி வழக்காக நாகாலாந்தில் உள்ள கோஹிமா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சோதனை செய்த போது, பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ED ஆல் முடக்கப்பட்ட நிதி

இதில், Easebuzz Private Limited, Pune ரூ.33.36 கோடி, பெங்களூருவில் உள்ள Razorpay Software Private Limited ரூ.8.21 கோடி, மற்றும் Cashfree Payments India Private Limited ரூ.1.28 கோடி, Paytm ரூ.1.18 கோடி அளவுக்கு பணம் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.46.67 கோடி நிதி கண்டறியப்பட்டு அந்த தொகை தற்போது முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்