Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இல்லத்தரசிகளே..! சீக்கிரம் கிளம்புங்க… தங்கம் விலை இவ்ளோ கம்மியா எப்பவும் கிடைக்காது…

Gowthami Subramani September 16, 2022 & 11:25 [IST]
இல்லத்தரசிகளே..! சீக்கிரம் கிளம்புங்க… தங்கம் விலை இவ்ளோ கம்மியா எப்பவும் கிடைக்காது…Representative Image.

தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்து காணப்படுவதால், இல்லத்தரசிகள் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர்.

அதன் படி தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 40 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் குறைந்து காணப்படுவதால், இது மக்கள் தங்கம் வாங்குவதற்கான ஆசையை மேலும் தூண்டியுள்ளது. இது நகை வாங்குவோர்களுக்கு மிகுந்த பேரின்பத்தை அளித்துள்ளது.

செப்டம்பர் 16 ஆம் நாளான இன்று ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 4974 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 39,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரத்தின் படி, வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 61.60 ரூபாயாகவும், ஒரு கிலோவிற்கு ரூ.61,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாரம் முழுவதும் ஏற்றம் இல்லாமல், தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை