Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபாளிக்கு போனஸ் தரணுமா? கேட்ட கேள்வியால் பீதியடைந்த தொழிலாளிகள்!

Priyanka Hochumin October 18, 2022 & 11:46 [IST]
தீபாளிக்கு போனஸ் தரணுமா? கேட்ட கேள்வியால் பீதியடைந்த தொழிலாளிகள்!Representative Image.

இந்தியாவில் பண்டிகை காலம் பலதரப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது. அந்த மாறியான பண்டிகை காலங்களில் வருடம் முழுவதும் ஓடாய் தேய்ந்து உழைக்கும் மக்களுக்கு போனஸ் என்பது அடிப்படை விஷயமாக மாறியுள்ளது. அது குறித்து நிறைய கேள்விகள் உங்களுக்குள் இருக்கும், அதை  வைக்கும் விதமாக இந்த பதிவு இருக்கும்.

எப்போது உருவாக்கப்பட்டது....

இயந்திரங்கள் இல்லாத காலத்தில் மக்களின் வேலையோ அதிகாமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரே நாளில் இயந்திரங்களை பயன்படுத்தி தங்களின் லாபத்தை அதிகரிக்கின்றனர். என்ன தான் இயந்திரங்கள் இருந்தாலும், உழைப்பு என்று மனிதர்கள் போடாமல் இருந்தால் என்ன ஆகும். வருடம் முழுவதும் தங்களின் உழைப்பை நம்பியே இருக்கும் மக்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த போனஸ். இது 1965ம் (Payment of Bonus Act, 1965) ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 

எவ்ளோ போனஸ் தரணும்....

அந்தந்த தோழிகளுக்கு என்று அரசாங்கம் அடிப்படை தொகையை அவர்கள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளிகளின் ஊதியத்தில் இருந்து அதிகபட்சமாக 20% மற்றும் குறைந்தபட்சமாக 8%ம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

சரி யாருக்கு போனஸ் தரணும்!

Payment of Bonus Act, 1965 சட்டத்தின் கீழ், 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அல்லது 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு லாபத்தின் அடிப்படையில் முதலாளிகள் போனஸ் வழங்க வேண்டும்.

போனஸ் வாங்க தகுதி....

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு சில திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாதம் ரூ. 10,000/- வாங்கும் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்கப்பட்டது. அதை 2015 ஆம் ஆண்டு ரூ. 21,000/-க்கு உயர்த்தப்பட்டது. எனவே, நீங்கள் ரூ. 21,000/-க்கும் கீழ் ஊதியம் வாங்குனீர்கள் என்றால் உங்களுக்கு போனஸ் வழங்கப்படும்.

தீபாவளிக்கு போனஸ் கட்டாயம் தரணுமா?

சட்டத்தின் அடிப்படையில், ஒரு நிதியாண்டின் முடிவில் இருந்து 8 மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளிக்கு தர வேண்டும் என்று எந்த சட்டமும் கூறப்படவில்லை. இருப்பினும் இது பல வருடங்களாக செயல்படுவதால், நிறுவனங்கள் தீபாவளியை ஒட்டி போனஸ் வழங்குவதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்