Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol price today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! 170 ரூபாய்க்கு விற்பனை..! எங்கு தெரியுமா..?

Muthu Kumar May 16, 2022 & 07:31 [IST]
Petrol price today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! 170 ரூபாய்க்கு விற்பனை..! எங்கு தெரியுமா..?Representative Image.

Petrol price today : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் வரலாறு காணாத அளவிற்க்கு 100ரூபாயை கடந்துள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 41வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ம்மேலும் டீசல் விலை லிட்டர் டீசல் 153 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை