Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Agnipath Latest News in Tamil : திருப்பூர் மற்றும் திருச்சி மண்டலத்தில் நடைபெற இருக்கும் அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம்…! விண்ணப்பப்பதிவு, கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதோ…!

Gowthami Subramani July 06, 2022 & 14:00 [IST]
Agnipath Latest News in Tamil : திருப்பூர் மற்றும் திருச்சி மண்டலத்தில் நடைபெற இருக்கும் அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம்…!  விண்ணப்பப்பதிவு, கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதோ…!Representative Image.

Agnipath Latest News in Tamil: அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் விரைவில் திருச்சி மண்டலம் சார்பில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் நாள், ஜூலை மாதம் 5 ஆம் நாள் வரை விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ராணுவத் துறையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ராணுவத்துறை வெளியிட்டுள்ளது (Agneepath Fair in Trichy).

அதன் படி, அக்னிபத் திட்டத்தின் மூலம், ராணுவத்தில் சேரவிருக்கும் அக்னிபத் வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு ஜூலை 1 முதல் ஜூலை மாதம் 30 ஆம் நாள் வரை நடைபெறுகிறது (Agneepath News in Tamil).

திருச்சி மண்டலத்தின் கீழ்

இவ்வாறு திருச்சி மண்டலத்தின் கீழ் பின்வரும் மாவட்டங்கள் அடங்குகின்றன (Military Recruitment in Trichy).

திருச்சி                                  விருதுநகர்

கரூர்                                      திருநெல்வேலி

பெரம்பலூர்                         தூக்குக்குடி

புதுக்கோட்டை                   கன்னியாக்குமரி

திருவாரூர்                           அரியலூர்    

நாகப்பட்டினம்                   தென்காசி

மயிலாடுதுறை                   காரைக்குடி

சிவகங்கை                          ராமநாதபுரம்

முக்கிய விவரங்கள்

ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: ஜூலை 01, 2022

பதிவு முடிவடையும் நாள்: ஜூலை 30, 2022

ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://joinindianarmy.nic.in/Authentication.aspx

பதிவு செய்த பின்,

இவ்வாறு மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குப் பின் கலந்து கொள்வதற்கான அனுமதி கடிதம் அனுப்பப்படும்.

அனுமதி கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட தேதி மற்றும் இடத்தில் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கு கொள்ளலாம்.

தேதி: ஆகஸ்ட் 21, 2022 முதல் செப்டம்பர் 01, 2022 வரை

இடம்: கன்னியாக்குமரி, நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானம்

திருப்பூர் மண்டலத்தின் கீழ்

அக்னிபத் திட்டத்தின் கீழ், திருப்பூர் மண்டலத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, திருப்பூர் மண்டலத்தின் கீழ் அடங்கும் மாவட்டங்கள் (Agneepath Fair in Tiruppur).

கோவை                               நாமக்கல்    

திண்டுக்கல்                        நீலகிரி

தர்மபுரி                                சேலம்

ஈரோடு                                 தேனி

மதுரை                                 கிருஷ்ணகிரி

திருப்பூர்

முக்கிய விவரங்கள்

ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: ஜூலை 01, 2022

பதிவு முடிவடையும் நாள்: ஜூலை 30, 2022

ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://joinindianarmy.nic.in/Authentication.aspx

பதிவு செய்த பின்,

திருப்பூர் மண்டல பிரிவினர் மேலே குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பத்த நபர்கள் கீழ்க்கண்ட இடம் மற்றும் தேதிக்குச் சென்று ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கான அனுமதி கடிதம் ஆகஸ்ட் 14, 2022 ஆம் நாளுக்குப் பிறகு அனுப்பி வைக்கப்படும் (Agneepath News Today).

தேதி: செப்டம்பர் 20, 2022 முதல் அக்டோபர் 01, 2022 வரை

இடம்: திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள டி.இ.ஏ., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

இந்த ஆட்சேர்ப்பு முகாம், கிளர்க், ஸ்டோர் பாதுகாப்பாளர், தொழில்நுட்பம், பொதுப்பணி உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறுறது எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்