Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சென்டரல் பேங்கில் பணியுரிய விருப்பமா? ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்..

Nandhinipriya Ganeshan Updated:
சென்டரல் பேங்கில் பணியுரிய விருப்பமா? ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்..Representative Image.

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Central Bank of India) நாடு முழுவதும் நிறுவனத்தில் காலியாக உள்ள 5000 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே, அப்ரண்டிஸ் பணிகளுக்கான தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இது ஒப்பந்தம் அடிப்படையிலான பணியாகும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு:

பதவியின் பெயர் - அப்ரண்டிஸ்

காலி பணியிடங்கள் - 5000

கடைசி தேதி: 03.04.2023

பணியிடம்:

இந்தப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் 230 காலியிடங்களும், பாண்டிச்சேரியில் 1 காலிடமும் உள்ளன. மீதமுள்ள காலியிடங்கள் பிற மாநிலங்களில் நிரப்பப்பட இருக்கின்றன. 

சம்பளம்:

அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி உதவித்தொகை பெறுவார்கள். PayScale கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1.கிராமப்புற/அரை நகர்ப்புற கிளைகள் - 10,000/-

2.நகர்ப்புற கிளைகள் - 12,000/-

3.மெட்ரோ கிளைகள் - 15,000/-

வயது வரம்பு: 

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறை அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது

1.ஆன்லைன் எழுத்துத் தேர்வு

2.நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பம்/தேர்வு/அறிவிப்பு கட்டணம் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் வங்கியால் நியமிக்கப்பட்ட ஆய்வு/பரிசோதனை அமைப்பால் கோரிக்கையின் பேரில் மட்டுமே செலுத்தப்படும்.

SC / ST / பெண்கள் - 600/- +GST

மற்றவை - 800/- +GST

PWBD  400/- +GST

கடைசி தேதி:

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 03.04.2023 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Apprenticeshipindia.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்