Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs Daily in Tamil: ஜூன் 29, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்...!

Gowthami Subramani June 29, 2022 & 17:00 [IST]
Current Affairs Daily in Tamil: ஜூன் 29, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்...!Representative Image.

Current Affairs Daily in Tamil: ஜூன் 29-க்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

எரிசக்தி பாதுகாப்பு – ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

சர்வதேச சூழல் சவால் மிக்கதாக மாறியுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் தெரிவித்தார்.

அதன் படி, இந்த மாநாட்டில் எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து உரையாற்றினார்.

ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி, குலாபி மீனாகாரி, காஷ்மீர் ஜமக்காளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய கலைப் பொருள்களைப் பரிசளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கருத்துகளை ஜி7 மாநாடு கூட்டமைப்பின் தலைவர்களும் வரவேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இது 3 ஆவது முறை. சர்வதேச அளவில் இந்தியாவாவின் பங்கு அதிகரித்து வருவதை இது வெளிக்காட்டுகிறது. உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்றார் வினய் மோகன் குவாத்ரா.

IRENA ஏஜென்சி

International Renewable Energy Agency எரிசக்தியில், 12% ஹைட்ரஜனை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் படி, இது 2020 ஆம் ஆண்டுக்குள் நிகழும் என கூறியுள்ளது.

2021-22 ஆம் அண்டின் மத்திய பட்ஜெட் தாக்களில் தேசிய ஹைட்ரஜன் ஏஜென்சி பணியை உருவாக்கியது. இதன் நோக்கம், வருங்காலத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

IRENA – இது ஜனவரி 26, 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இது புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைத் தரக்கூடிய முதல் இன்டர்நேஷனல் நிறுவனமாக விளங்குகிறது. இது தொழில்நுட்பம் அதிகம் உள்ள மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தக் கூடிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ஆற்றலை, சோலார், காற்று ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனா பிரிக்கும் போது, நீர் மற்றும் நீர் ஆவியாதல் கிடைக்கும். இந்தியாவில் முதல் முறையாக Green Hydrogen Pilot Plant-ஐ அசாமில் உள்ள ஜோர்கத் பம்ப் நிலையத்தில் ஒரு நாளைக்கு 10kg திறனை அளிக்கவல்லதாக நிறுவப்பட்டுள்ளது. இது Oil India Limited மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

47 ஆவது ஜிஎஸ்டி

நாடு முழுவதும் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்துள்ள அறிக்கையின் படி, ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் எந்தவொரு முடிவுகளையும் மாநில அரசுகள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாநிலங்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2022 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 28 மற்றும் ஜூன் 30 ஆகிய இருநாள்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா (Minority Rights Day)

ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் நாள், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு இதனை செயல்படுத்தும் வகையில்  ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்க தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலாளர் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

141 கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை அகரமுதலித் திட்ட இயக்கத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற 113-ஆவது கூட்டத்தில் 141 கலைச் சொற்களுக்கான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சில ஆங்கிலச் சொல்லுக்கான கலைச் சொல்லாக்கம்

Drone Technician – சுரும்பூர்தி வல்லுநர்

Helicopter – உலங்கூர்தி

ஃபலூடா – பனிக்கனிக் குழைவு

மெகா ஜாப் ஃபேர் – பணி தேடும் பெருங்கூடல்

மாமோஸ் – கறி பொதி கொழுக்கட்டை

டிஜிட்டல் டிடாக்ஸ் – எண்மத் தவிர்ப்பு

நெகிழி தடை – ஜூலை 1 முதல் அமல்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1 ஆம் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

அதன் படி, இந்த ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு இந்த 2022 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்