Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்!

Saraswathi Updated:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்! Representative Image.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு இளங்கலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள், 2 பல்மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 50 எம்.பி.பி.எஸ் இடங்களும், 200 பல்மருத்துவப் படிப்பு (பிடிஎஸ்) இடங்களும் இருக்கின்றன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிவரை பெறப்படுகிறது. இந்த படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூலை 2வது அல்லது 3வது வாரத்தில் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தாண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை தமிழக மருத்துவக் கல்வி இயக்கம் உயர்த்தியுள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் உட்பட மொத்த கட்டணமாக ரூ.13610 செலுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தக் கட்டணமானது ரூ.18,093 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், பி.டி.எஸ் எனப்படும் பல்மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் ரூ.11,610 பதிலாக ரூ.16073 ஐ இந்தாண்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.  மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்து மருத்துக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களின் நூலகம், ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இந்தக் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்