Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம் - மாணவ-மாணவியர் உற்சாகம்

Saraswathi Updated:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம் - மாணவ-மாணவியர் உற்சாகம் Representative Image.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. 

தமிழக கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டுவரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு 1,07,299 இடங்கள் உள்ளன. நடப்பாண்டில் இந்த இடங்களில் சேர்வதற்கு 2லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ம் தேதி மாணவர்களுக்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன்30ம் தேதி இரண்டு கட்டங்களாக தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. 

இந்த கலந்தாய்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 23,295 பேர் உட்பட 84,899 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன. இதையொட்டி, மாணவ-மாணவியரை வரவேற்க கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள், ராகிங் உள்ளிட்ட அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த அறிவுறுத்தல்களை கல்லூரி கல்வி இயக்ககம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்