Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடக்கம்..!

Saraswathi Updated:
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடக்கம்..! Representative Image.

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று தொடங்குகிறது.  

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. அதில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஓதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என  மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் ஏதேனும் ஒன்றில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை மாணவ-மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதேபோல், மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட19 படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு அவகாசமும் ஜூலை 10ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்