Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எப்போது? - சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு..! | CBSE Board Exam 2024

Saraswathi Updated:
10, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எப்போது? -  சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு..! | CBSE Board Exam 2024Representative Image.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்தின்கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள், கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டு 12 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18.2024 அன்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்.8.2024 அன்றும் தொடங்கவுள்ளது. 

இதேபோல், சிபிஎஸ்இ எனப்படும் மத்தியப் பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவ-மாணவியருக்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 17ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதி பொதுத்தேர்வுகள் நிறைவடையும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்