Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி… எப்படி விண்ணப்பிப்பது?

Gowthami Subramani October 31, 2022 & 10:20 [IST]
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி… எப்படி விண்ணப்பிப்பது?Representative Image.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது ஹெச்.சி.எல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளி கல்வி இயக்குநரகத்துடன் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான, வேலைவாய்ப்பு மற்றும் உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

HCL நிறுவனம் வழங்கும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், 2021-22 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு HCL Techbee “Early Career Program” திட்டத்தில் சேர்வதற்கான பயிற்சிக் கட்டணம் முழுவதும் வழங்கப்படுகிறது.

ஊக்கத்தொகை

மேலும், இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு 7 ஆம் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

உயர்கல்வி தொடர

மேலும், மாணவ, மாணவிகள் பணியில் சேர்ந்த உடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டு தோறும் ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரையிலான ஊதியத் தொகையில் பணியமர்த்தப்படுவர். மேலும், நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் தொடர முடியும். இதற்கான கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை நிறுவனமே வழங்கும்.

எப்படி பதிவு செய்வது?

இந்த திட்டத்தின் கீழ், நிறுவனத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://registrations.hcltechbee.com/

மேலும், இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

சென்னை – 88079 40948

மதுரை – 9788156509

திருநெல்வேலி– 98941 52160

திருச்சி – 94441 51303

கோவை, ஈரோடு, திருப்பூர் – 89032 45731, 98659

இந்த வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிக்கான திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்