Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. எல்&டி-யில் அருமையான வேலை.. | How To Apply L&T Recruitment 2023 Online Tamil

Nandhinipriya Ganeshan Updated:
டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. எல்&டி-யில் அருமையான வேலை.. | How To Apply L&T Recruitment 2023 Online TamilRepresentative Image.

கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் சேவையில் முன்னணி வகிக்கும் லார்சன் & டப்ரோ (L&T) நிறுவனம் பட்டயப் பயிற்சி பொறியாளர் (Diploma Engineer Trainees) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித் தகுதி:

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கு பிறகு 3 ஆண்டுகள் அல்லது 6செமஸ்டர் தேர்வுகள் கொண்ட முழுநேர டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2023 ஏப்ரல் - மே கல்வியாண்டில் கீழ்காணும் துறைகளில் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்கள் அல்லது 2023 ஜூன் 30க்குள் டிப்ளமோ படிப்பை முடிக்க காத்திருக்கும் மாணவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Civil
Electrical 
Mechanical 
Mechatronics 
Electronics & Communication 
Electronics & Instrumentation
Automobile
Environmental Health & Safety
Computer Science / Information Technology
Mining
Instrumentation & Control
Chemical & Metallurgy 

60% மதிப்பெண்களுடன் முதற் முயற்சியிலேயே டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இவர்கள் விண்ணப்பிக்க இயலாது:

டிப்ளோமா படிப்பிற்கு முன்னரோ/பின்னரோ பொறியியல் / அறிவியல் / கலை ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள். sandwich courses மூலம் டிப்ளமா படித்தவர்கள் இப்பணிக்கு தகுதியற்றவர்கள்.

செமஸ்டர் தேர்வுகளில் ஏதேனும் அரியர் வைத்திருப்பவர், மேலைநாடுகளில் கல்வித் தகுதியை எட்டியவர்கள் ஆகியோரும் தகுதியற்றவர்கள்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள்  01.07.2001 க்கும் 30.06.2005 இடையில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

லார்சன் & டப்ரோ (L&T) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி https://campus.lntedutech.com/offline/#/open/off-campus-det/profile .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்