Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு.. தகுதி & விண்ணப்பிக்கும் முறை.. | Tamil Nadu Minority Schools Recruitment 2023

Nandhinipriya Ganeshan Updated:
ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு.. தகுதி & விண்ணப்பிக்கும் முறை.. | Tamil Nadu Minority Schools Recruitment 2023Representative Image.

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4,188 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் [TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL] வெளியிட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள். குறிப்பாக, இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு [வயது வரம்பு] மிகாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மொத்த பணியிடங்கள் - 4,188

பணியிடம் குறித்த விபரம்:

  • ஆங்கிலம் - 349
  • கணக்கு ஆசிரியர்- 349
  • பொது அறிவியல் ஆசிரியர்-349
  • சமூக அறிவியல் ஆசிரியர்- 349
  • நூலகர்- 349
  • யோகா ஆசிரியர்- 349
  • கலை ஆசிரியர்- 349
  • இசை ஆசிரியர்- 349
  • இந்தி ஆசிரியர்- 349
  • தெலுங்கு ஆசிரியர்- 349
  • தொழில்நுட்ப உதவியாளார்- 349
  • அலுவலக உதவியாளார்- 349

சம்பள விவரம்: 

  • யோகா ஆசிரியர் - ரூ.32,000
  • கலை ஆசிரியர் - ரூ.32,000
  • இசை ஆசிரியர் - ரூ.32,000
  • இந்தி ஆசிரியர் -ரூ.35,000
  • தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000
  • ஆங்கிலம் - ரூ.35,000
  • கணக்கு ஆசிரியர்- ரூ.35,000
  • பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
  • சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
  • நூலகர் - ரூ.30,000
  • தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000
  • அலுவலக உதவியாளார் -ரூ.20,000
ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு.. தகுதி & விண்ணப்பிக்கும் முறை.. | Tamil Nadu Minority Schools Recruitment 2023Representative Image

கல்வித் தகுதி:

யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php

விண்ணப்ப கட்டணம் : 

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கவனத்திற்கு:

பெண் விண்ணப்பதாரர்கள் ஆண், பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 

அதுவே, ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 

இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. தரவரிசை பட்டியல் மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்.15க்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2023


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்