Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி பதிவிறக்கம் செய்வது.? | NEET UG Admit Card 2023

Gowthami Subramani Updated:
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி பதிவிறக்கம் செய்வது.? | NEET UG Admit Card 2023Representative Image.

மருத்துவ நுழைவுத் தேர்வான 2023 ஆம் ஆண்டின் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் குறிப்பிடப்பட்ட இணையதளத்திற்குச் சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த தேர்வானது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியே நடத்தப்படுகிறது.

அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த மே மாதம் 7 ஆம் நாள் மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், நீட் தேர்வானது ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை, http://neet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்ரை உள்ளீடு செய்து பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்