Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Navy Recruitment 2022: இந்திய கடற்படையில் குவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 28, 2022 & 12:30 [IST]
Indian Navy Recruitment 2022: இந்திய கடற்படையில் குவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

Indian Navy Recruitment 2022: அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய கடற்படையில் சேரும் நபர்களுக்கான விண்ணப்ப தேதி வெளியாகியுள்ளது (Indian Navy Recruitment 2022).

இந்திய கடற்படையில் பணிபுரிவதற்கு மத்திய அரசு அக்னிபத் திட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், முப்படைகளான இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை போன்ற மூன்று படைகளிலும் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் நபர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இருப்பர். மேலும், பணியில் சேர்வதற்கு முன்னர் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும் (Agneepath Indian Navy Jobs 2022).

சேர்வதற்கான தகுதி

இத்திட்டத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாகவர்.

மேலும், இவர்களுக்கான வயது வரம்பு 17.50 முதல் 21 வயது வரை கொண்டிருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், ராணுவத்தில் சேர நினைப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியம் (Agneepath Indian Navy Jobs 2022).

முக்கிய விவரங்கள்

இந்திய விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 24 ஆம் நாள் தொடங்கியது. மேலும், இதற்கு ஜூலை மாதம் 5 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு

இந்த அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ( Indian Navy Selection Process).

கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணி முடித்து வரக்கூடிய அக்னி வீரர்களுக்கு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது நிறுவனத்தில் வேலை தரப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேரும் நபர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்ற தேதி வெளியாகியுள்ளது.

அதன் படி, இந்திய கடற்படை ஆட்சேர்ப்புக்கான அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் மற்றும் அக்னிவீர் எம்.ஆர் பதவிகளுக்கு வரும் ஜூலை மாதம் 1, 2022 ஆம் நாள் முதல் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது (Indian Navy Recruitment Apply Online).

மேலும், இதற்கான ஆன்லைன் பதிவு joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்