Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NCRTC Recruitment 2022 Apply Online: போக்குவரத்துக் கழகத்தில் அட்டகாசமான வேலை…! நாளை கடைசி நாள்… உடனே விண்ணப்பியுங்கள்.

Gowthami Subramani May 16, 2022 & 07:20 [IST]
NCRTC Recruitment 2022 Apply Online: போக்குவரத்துக் கழகத்தில் அட்டகாசமான வேலை…! நாளை கடைசி நாள்… உடனே விண்ணப்பியுங்கள்.Representative Image.

NCRTC Recruitment 2022 Apply Online: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய தகவல்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் (NCRTC)

பணியின் பெயர்

நிர்வாகி/ பாதுகாப்பு

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

05-05-2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

17-05-2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NCRTC Job Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

நிர்வாகி/ பாதுகாப்பு

01

 

ஊதியத்தொகை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்குக் கார்ப்பரேஷனின் கொள்கைப் படியே சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் பிரிவில் பட்டதாரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • காவல் துறையில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
  • டெல்லி/ காசியாபாத்/ மீராட் போன்ற இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் சட்ட அமலாக்க முகவர்களுடன் விரிவான வலையமைப்பைக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அனைத்து சுற்று காவல் மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் உட்பட பாதுகாப்பு ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 02.05.2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (NCRTC Job Apply).

துறை

வயது வரம்பு

நிர்வாகி/ பாதுகாப்பு

65 வயதுக்கு மிகாமல்

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முத்லைல் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் உள்ள Career Section பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அந்தப் பக்கத்தில் இருக்கும் அறிவிப்புகளில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்துப் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதன் பின், ஆன்லைன் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து, அதனை ப்ரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆதார ஆவணங்களுடன் ப்ரிண்ட் அவுட் செய்த விண்ணப்பத்தினைக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தொழில் பிரிவு,

மனிதவளத் துறை,

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம்,

விகாஸ் சதன் அருகில்,

ஐஎன்ஏ காலனி,

புது டெல்லி-110 023.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்