Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை தொடங்கும் நீட் தேர்வு 2023...நேரம் உள்ளிட்ட அனைத்து விவரமும் இதோ | NEET UG 2023

Priyanka Hochumin Updated:
நாளை தொடங்கும் நீட் தேர்வு 2023...நேரம் உள்ளிட்ட அனைத்து விவரமும் இதோ | NEET UG 2023 Representative Image.

2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு [NEET UG] நாளை மே 7, 2023 அன்று தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு இந்தியாவிலும் வெளியிலும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படுவதாகும். NTA அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் NEET UG 2023-வின் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு NEET UG 2023 தேர்வு எழுத மொத்தம் 20.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகம். அதில் 11.8 லட்சம் பேர் மாணவிகள் மற்றும் 9.02 லட்சம் பேர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

தேர்வு நேரம் - 2023 ஆம் ஆண்டின் NEET UG தேர்வு பேனா மற்றும் காகித முறையில் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடத்தப்படும். அதாவது மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.20 மணி வரை நடைபெறும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களின் புகைப்பட அடையாளத்துடன், அனுமதி அட்டைகளை எக்ஸாம் ஹாலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வு முறை - NEET UG 2023 வினாத்தாளானது இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும்.

பிரிவு A - 35 கேள்விகள்

பிரிவு B - 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

மாணவர்கள் சரியாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான்கு மதிப்பெண் அளிக்கப்படும். அதே சமயம் தவறாக பதில் அளிக்கும் கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் எந்த மொழியைத் தேர்வு செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் வினாத்தாள் தரப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்