Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NEET Exam Latest Update: மீண்டும் தள்ளிப் போகும் நீட் தேர்வுக்கான பதிவு…! எந்த தேதி தெரியுமா..?

Gowthami Subramani May 16, 2022 & 10:45 [IST]
NEET Exam Latest Update: மீண்டும் தள்ளிப் போகும் நீட் தேர்வுக்கான பதிவு…! எந்த தேதி தெரியுமா..?Representative Image.

NEET Exam Latest Update: நீட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை எனப்படும் NTA 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் அதிக நேரத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு போல, மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுக்கப்பட்டும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிப்பதற்கான நிலை உருவாகாமல் போனது. மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அவர்களின் திறன் மற்றும் தகுதிகளைத் தீர்மானிக்க நுழைவுத் தேர்வு வைக்கப்படும் (NEET Exam Latest Update).

இது குறித்து, தமிழ்நாட்டில் வெவ்வேறு விதமான வழக்குகள் எழுந்த போதிலும், இந்த நீட் தேர்வுக்கான விலக்கு இன்று வரை நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளனர். இருந்த போதிலும், ஆளுநரின் பெரும் வாக்குவாதம் கொண்டு இறுதியில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நீட் தேர்வுக்கான மசோதா அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க மே மாதம் 15 ஆம் நாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயுதப் படை மருத்துவச் சேவைகளின் (AFMS) மூலம் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படியயில், நீட் தேர்வுக்கான பதிவுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது அறிவிப்புகளின் தொடர்ச்சியாக மே 1 ஆம் நாள் மற்றும் மே 5 ஆம் நாள் ஜெனெரல் ஆயுதப்படையின் மருத்துவச் சேவைகளின் கோரிக்கையின் படி விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது (NEET Exam Update 2022).

விண்ணப்பிக்கும் முறை

  • NTA -வின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் Registrations for NEET UG 2022 என்ற லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அந்த இணையதளத்தில் பதிவு செய்து, NEET UG பதவிக்கான விண்ணப்பப் படிவத்தினை நிரப்பவும்.
  • இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி ஆன்லைன் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • பின்னர், கடைசியாக பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தினைப் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளவும்.

NTA வெளியிட்ட அறிக்கையின் படி, நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ஜூலை மாதம் 17 ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில், நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு நிமிடம் வீதம் 200 நிமிடங்களுக்கு நடத்தப்படும். மேலும், இந்தத் தேர்வு இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவிற்கு அப்பால் 14 நகரங்களிலும் நடைபெறும் (NEET Exam News).

மேலும், இந்த இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஒடியா, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது போன்ற 13 மொழிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பக்கட்டணம்

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,600 செலுத்த வேண்டும். மேலும், General-EWS, OBC-NCL போன்ற பிரிவினருக்கு பதிவுக்கட்டணமாக ரூ.1,500 செலுத்தலாம்.

AFMS மருத்துவக் கல்லூரிகளில் BSc (நர்சிங்) படிப்புக்குச் சேர விரும்பும் பெண் விண்ணப்பதாரர்களும் இந்த இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று NTA தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்