Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 26 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani September 02, 2022 & 16:00 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 26 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

சர்வதேச மாநாடு

‘இந்திய கனிமங்கள் மற்றும் உலோகத் தொழில்துறை தொடர்பான சர்வதேச மாநாடு’ நடைபெறும் இடம் எது?

விடை: புது தில்லி

இந்தியாவின் சுரங்க நிறுவனமாக விளங்கும் NMDC ஆனது, FICCI உடன் இணைந்து, இந்திய கனிமங்கள் மற்றும் உலோகத் தொழில்துறை குறித்த மாநாட்டை புது தில்லியில் ஏற்பாடு செய்தது. இதற்கான தலைப்பு ‘2030-ஐ நோக்கிய மாற்றம் & தொலைநோக்குப் பார்வை 2047’ ஆகும். மேலும், விடுதலை அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, நடுவன் சுரங்க அமைச்சகம் மற்றும் நடுவண் எஃகு அமைச்சகத்துடன் இணைந்து, இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் தொலைநோக்குப் பார்வை – 2047-ஐ அடைவதற்கான கனிமங்கள் மற்றும் உலோகத் தொழில்துறைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதாகும்.

உக்ரைனின் விடுதலை நாள்

உக்ரைனின் விடுதலை நாளை $3 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவி அளித்து கொண்டாடியது எந்த நாடு?

விடை: அமெரிக்கா

 உக்ரைனின் விடுதலை நாளை $3 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவி வழங்கி அமெரிக்க அதிபரான ஜோ பிடன், கொண்டாடினார். உருசியாவின் படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்காவால் அளிக்கப்படும் மிகப்பெரிய நிதியுதவி இதுவே ஆகும். வரும் நாட்களில் புதிய தாக்குதல்களை உருசியா நடத்த திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த புதிய தொகுப்பில், ‘NASAMS’ என அழைக்கப்படும் ஆறு கூடுதல் ஏவுகணை அமைப்புகள், பீரங்கியை எதிர்க்ககூடிய ரேடார்கள், VAMPIRE எனப்படும் டிரோன் மற்றும் பூமா டிரோன்கள் என்றும்  டிரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அடங்குகிறது.

நீலத்தகடு

எந்த இந்தியத் தலைவரின் இல்லத்திற்கு லண்டனின், ‘நீலத்தகடு’ அந்தஸ்து வழங்கப்பட்டது?

விடை: தாதாபாய் நௌரோஜி

இந்திய தலைவராக விளங்கும் தாதாபாய் நௌரோஜியின் லண்டன் இல்லம், லண்டனில் வாழ்ந்து குறிப்பிடத்தக்க நபர்களுக்காக வழங்கப்படும் ‘நீலத்தகடு’ பெற உள்ளது. இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிரியர் ஆவார். இந்த நீலத்தகடு திட்டம் கடந்த 1866 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தற்போது ஆங்கில பாரம்பரிய அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.

நடுவண் அமைச்சகம்

‘SMILE -75’ என்ற முனைவுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

விடை: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

விடுதலை அமுதப் பெருவிழா உணர்வின் கீழ், இரக்கும் செயலில் ஈடுபடுவோர்க்கு விரிவான மறுவாழ்வு அளிப்பதற்காக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, 75 மாநகராட்சிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த முனைவானது ‘SMILE - 75’ அல்லது ‘SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise’ முனைவு எனவும் அழைக்கப்படுகிறது.

இது மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், விழிப்புணர்வு, கல்வி, ஆலோசனை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பிற அரசு சார்ந்த நலத்திட்டங்களுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக உள்ளது.

வேலைவாய்ப்புப் போக்கு

‘இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் – 2022’ என்ற அறிக்கையை எந்த அமைப்பு வெளியிட்டது?

விடை: ILO (International Labor Organization)

‘இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் – 2022’ என்ற அறிக்கை சமீபத்தில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் படி, இந்தியா 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் இந்திய இளையோர்களின் வேலைவாய்ப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைய்போர்கள், பெரியவர்களை விட அதிக சதவீதமாக வேலையிழப்பைச் சந்தித்தனர். இந்த 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் வேலைவாய்ப்பற்ற இளையோர்களின் எண்ணிக்கை 73 மில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்