Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Public Exam Update: பொதுத் தேர்வு எழுதாதவங்க இத்தன பேரா..? என்ன காரணமாக இருக்கும்..?

Gowthami Subramani May 14, 2022 & 18:00 [IST]
Public Exam Update: பொதுத் தேர்வு எழுதாதவங்க இத்தன பேரா..? என்ன காரணமாக இருக்கும்..?Representative Image.

Public Exam Update: தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடந்த பொதுத் தேர்வில், இதுவரை 1.18 லட்சம் அளவிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் இருந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால், இரண்டு ஆண்டுகளாக தேர்வு எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் கொரோனா தாக்கம் சற்று குறைவாக இருப்பதால், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட்டு, பொதுத் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது (12 Public Exam Update).

தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள்

அவ்வாறு, தமிழகத்தில், 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இதன் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 42,024 பேர் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளனர் (Public Exam Updated News). மேலும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 43,533 மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,674 மாணவ, மாணவிகளும் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

காரணம்

இதில், நடப்பு கல்வியாண்டில் 26,77,503 மாணவர்கள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காகப் பதிவு செய்திருந்தனர் (12 Public Exam Update). ஆனால், கொரோனா சூழ்நிலை நெருக்கடி காரனமாக 1,18,231 பேர் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குழந்தைகள் திருமணம்

இதைத் தவிர வேறு சில காரணங்கள் உள்ளன என்பதையும் கூறினர். அதாவது கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து பள்ளிப்படிப்பை கைவிட்டு விட்டதாகவும், அவர்களில் சிலர் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்துவிட்டதும், இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், 2022 ஆம் ஆண்டில் 1.80 லட்சம் பள்ளிப்படிப்பு முடிவதற்கு முன்னரே இடையில் நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், இது போல அதிக அளவிலான மாணவர்கள் பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்