Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாடு அரசின் அட்டகாசமான அறிவிப்பு..! ரேஷன் கடைகளில் வேலை..! 4000 காலிப்பணியிடங்கள்..

Gowthami Subramani September 28, 2022 & 14:10 [IST]
தமிழ்நாடு அரசின் அட்டகாசமான அறிவிப்பு..! ரேஷன் கடைகளில் வேலை..! 4000 காலிப்பணியிடங்கள்..Representative Image.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, இதில் உள்ள காலிப்பணியிடங்கள், பதவிகள், தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு

பணியின் பெயர்

கட்டுனர், விற்பனையாளர்

காலிப்பணியிடங்கள்

4000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பண்டிகை காலங்களில் வழங்கப்படக் கூடிய அரசு சலுகைகள், நிவாரணப் பொருள்கள் உள்ளிட்டவையும் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு ரேஷன் கடைகளில் இருக்கும் விற்பனையாளர், கட்டுனர் பதவிகளுக்காக 4000 பணியிடங்களை நிரப்ப உள்ளது.

தகுதி

இதில் விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கட்டுனர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்