Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

ஒரே ஒரு மூலப்பொருள்...தினமும் 2 மணி நேரம்...அதிக லாபம் ஈட்டும் தொழில்!

Priyanka Hochumin Updated:
ஒரே ஒரு மூலப்பொருள்...தினமும் 2 மணி நேரம்...அதிக லாபம் ஈட்டும் தொழில்!Representative Image.

நல்லா படிச்ச பெண்கள் கல்யாணம் ஆகி வீட்ல சும்மா இருக்கீங்களா, அலுவலகத்தில் வேலை செய்து பிடிக்காமல் இருக்கிறீர்களா, இல்ல படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறீர்களா. உங்களுக்கு தினமும் ரூ.4000/- வரை வருமானம் தரும் அருமையான தொழில் ஒன்று உள்ளது. குறைவான முதலீடு அதிக வருவாய் ஈட்டும் இந்த தொழில் பற்றிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

அப்படி என்ன தொழில்?

தமிழகத்தைப் பொறுத்த வரை உணவு சார்ந்த தொழிலுக்கு அமோக வரவேற்பு எப்போதுமே உள்ளது. போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக லாபம் பார்க்க இதை விட சிறந்த தொழில் இருக்கவே முடியாது. இந்த தொழிலுக்கு மூலதனமான பொருள் தேங்காய். நம்முடைய ஆரோக்கியத்திற்கு தேங்காய் பால் எவ்ளோ நல்லது என்று நமக்கு தெரியும். இப்படி ஆரோக்கியத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கும் இந்த தொழிலுக்கு வரவேற்பு இருக்கும்.

ஆமா எவ்ளோ முதலீடு தேவை?

இந்த தொழிலுக்கு தேங்காய் துருவ மற்றும் பால் எடுக்க இயந்திரங்கள் தேவை. இதற்கு மொத்தமாக ரூ.60,000/- ஆகலாம். இந்த இயந்திரங்களை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கூட வாங்கலாம். உடனே வாங்க வருவாய் இல்லையென்றால், தொழில் நன்றாக டெவெலப் ஆன பிறகு வாங்கிக்கொள்ளலாம். தேங்காய் பாலை நீங்கள் வீட்டில் இருந்தே தயாரித்துக் கொள்ளலாம். அதனை விற்பனை செய்ய தள்ளு வண்டி இல்ல முதலீடு அதிகம் இருந்தால் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து விற்கலாம்.

எங்க கடை போட்டா நல்ல லாபம் கிடைக்கும் என்று கேட்டால்? மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கோவில், கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா போன்ற இடங்களில் போடலாம்.

எவ்ளோ விலைக்கு விற்கலாம்?

ஒரு நாளைக்கு தோராயமாக 20 லிட்டர் தேங்காய் பால் விற்றால் ரூ.4000/- கிடைக்கும். அப்படினா ஒரு கிளாஸ் பால் ரூ.20/-க்கு விற்றால், தினமும் 200 கிளாஸ் தேங்காய் பால் விற்றால் ரூ.4000/- சமாளிக்கலாம். நல்ல டெவெலப் ஆகிவிட்டால் தினமும் ரூ. 10,000/-க்கு மேல் லாபம் ஈட்டலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்