Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! 4300 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு.. சீக்கிரம் விண்ணப்பியுங்க….

Gowthami Subramani August 15, 2022 & 13:45 [IST]
SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! 4300 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு.. சீக்கிரம் விண்ணப்பியுங்க….Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

மத்திய ஆயுத காவல்படை உதவி ஆய்வாளர், டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண் மற்றும் மகளிர்)

காலிப்பணியிடங்கள்

4300

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

ஆகஸ்ட் 10, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 30, 2022 இரவு 11 மணி

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர்

3960

டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)

228

டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (மகளிர்)

112

மொத்தம்

4300

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமை பெற்றிருப்பது அவசியமாகும்.

https://images.news18.com/tamil/uploads/2022/08/image-3.jpg

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

மத்திய ஆயுத காவல்படை உதவி ஆய்வாளர், டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண் மற்றும் மகளிர்)

அதிகபட்ச வயது வரம்பு – 25 ஆண்டுகள்

 

விண்ணப்பதாரர்கள், ஜனவரி 02, 1997 ஆம் ஆண்டு மற்றும் ஜவனரி 01, 2022 ஆம் நாளுக்கு இடையே பிறந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்தரை ஆண்டுகள் வயது வரை வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையிலான வயது வரம்பு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

விண்ணப்பக்கட்டணம்

அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள் / பட்டியல் பழங்குடியினர்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள் / பட்டியல் பழங்குடியினர் பிரிவினைத் தவிர உள்ள ஏனைய தேர்வர்கள்

ரூ.100

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் தாள் எழுத்து தேர்வு

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வுகளில் கலந்து கொள்வர்.

இதில் தகுதி பெற்ற நபர்கள், மருத்துவ சோதனைக்கு வரவழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் SSC-யின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள மேலே கூறப்பட்ட பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு, அதில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கயெழுத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Police Recruitment 2022 Apply Online Tamilnadu | TN Police Recruitment 2022 Apply Online Last Date | Tamilnadu Police Recruitment 2022 Apply Online | Delhi Police Recruitment 2022 Apply Online | West Bengal Police Recruitment 2022 Apply Online Date | JK Police Recruitment 2022 Apply Online | Punjab Police Recruitment 2022 Apply Online | TN Police Recruitment 2022 Apply Online | West Bengal Police Recruitment 2022 Apply Online | TS Police Recruitment 2022 Apply Online | UP Police Recruitment 2022 Apply Online | Police Constable Recruitment 2022 Apply Online | Police SI Recruitment 2022 Apply Online


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்