Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்கள்.! மத்திய அரசின் அறிவிப்பு..!

Gowthami Subramani Updated:
அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்கள்.! மத்திய அரசின் அறிவிப்பு..!Representative Image.


இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, 1,21,891 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன எனவும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்கள்.! மத்திய அரசின் அறிவிப்பு..!Representative Image

தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 13.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி பணியாளர்களுக்கான இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும், உதவியாளர் பணிக்கு 49,499 இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு பதவிகளிலும், கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்