Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கால அவகாசம் நீட்டிப்பு.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!!

Sekar July 24, 2022 & 13:12 [IST]
கால அவகாசம் நீட்டிப்பு.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!!Representative Image.

தமிழகத்தில் விரைவில் இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெற இருக்கும் சூழலில் இதற்காக ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. டெட் தீர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

குறிப்பாக பி.எட் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் உதவும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இதனை ஏற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்பித்த பின், அதில் மேலும் மாற்றத்தை செய்யக்கூடாது என கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்