Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Teacher Recruitment 2022: ஆசிரியர் வேலைக்கு வேட்டு..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Gowthami Subramani July 01, 2022 & 13:15 [IST]
Teacher Recruitment 2022: ஆசிரியர் வேலைக்கு வேட்டு..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!Representative Image.

Teacher Recruitment 2022: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது (Teacher Recruitment 2022).

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிக ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர்களை நிரப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

பள்ளிக் கல்வித்துறையில் அறிவிப்பு

இந்த கொரோனா கால கட்டத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வாயிலாக, தமிழ்நாடு முழுவதும் இயங்கக் கூடிய அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தற்காலிக ஆசிரியர் நியமிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்தது (Government Teacher Recruitment 2022).

மேலும், இவ்வாறு நிரப்பப்படும் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளப்படுவர் (Teacher Jobs in Tamilnadu).

அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியர்களாக பணிபுரியக் கூடிய தகுதி வாய்ந்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபப்ட்டது.

அறிவிப்பிற்கு எதிர்ப்பு

ஆனால், இத்திட்டத்தில் பங்கு பெறக் கூடிய நபர்களுக்கு ஆசிரியர் அனுபவம் இருக்காது என்பதாலும், மேலும் இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பதில் ஏதாவது விளைவுகள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டது (Temporary Teacher Recruitment 2022).

உயர்நீதி மன்றம் கேள்வி

இதனையடுத்து, உயர்நீதி மன்ற மதுரைக் கிளை இந்த தற்காலிக ஆசிரியர் பணி முறை பற்றிய விவரங்களுக்கு உரிய விளக்கம் கேட்டுள்ளது. மேலும், தேர்வு முறை இல்லாமல், எந்த தகுதியையும் நிர்ணயிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை எவ்வாறு நிர்ணயிப்பது என்ற கேள்வியையும் எழுப்பினர்.

அதிரடி முடிவு

இது குறித்து மீண்டும் வழக்கு விசாரணக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஏன் இவ்வாறு செய்ய வேண்டும். நிரந்தரமாக நியமிப்பதில் என்ன பிரச்சனை வரப் போகிறது. அரசின் இந்த பதில் திருப்திகரமானதாக இல்லை எனக் கூறியுள்ளார் (Temporary Teacher Jobs 2022).

எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது மாணவர்களுக்கு நல்ல பலன் இல்லை. எனவே, தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் நியமிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, இந்த தற்கால ஆசிரியர்களை நியமிப்பது குறித்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு வரும் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்