Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு.! எப்படி தெரிந்து கொள்வது? | TN 12th Result 2023

Gowthami Subramani Updated:
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு.! எப்படி தெரிந்து கொள்வது? | TN 12th Result 2023Representative Image.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் நாள் தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுகள் இன்று அதாவது மே 08 ஆம் நாள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. அதன் படி, மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைத் அவர்களின் ரோல் எண்ணை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு 12வது முடிவு 2023

மாணவர்கள், தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று, 2023 தேர்வு முடிவுகளைச் சரிபார்க்க முடியும்.

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

மேலும், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தவிர SMS வசதியின் மூலமும், மொபைல் அப்ளிகேஷன் மூலம் தேர்வு முடிவுகளைச் சரிபார்க்க முடியும்.

ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

முதலில் மாணவர்கள் மேலே கூறப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதன் முகப்புப் பக்கத்தில் TN 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2023 என்ற இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

பின், புதிதாக திறக்கப்படும் பக்கத்தில் மாணவர்கள் தங்களது ரோல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் க்ளிக் செய்யவும்.

இவ்வாறு தோன்றும் புதிய பக்கத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்