Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

TNPSC Jobs: மாதம் 1.30 லட்சம் சம்பளத்தில் அரசு வேலைக்கான அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க..!

Gowthami Subramani Updated:
TNPSC Jobs: மாதம் 1.30 லட்சம் சம்பளத்தில் அரசு வேலைக்கான அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க..!Representative Image.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துணை பணிகளுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. அதன் படி, டிஎன்பிஎஸ்சி வெளியிடும் பணிக்காலியிடங்களின் விவரங்கள், தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இங்குக் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

ஒருங்கிணைந்த பொறியியல் துணை பணி

காலிப்பணியிடங்கள்

1083

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மார்ச் 04, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

794

இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை

236

இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறை

18

வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்புத் துறை

10

முதலாள் நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை

25

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

காலிப்பணியிடங்கள்

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

ரூ. 35,400 – ரூ.1,30,400

இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை

ரூ. 35,400 – ரூ.1,30,400

இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறை

ரூ. 35,400 – ரூ.1,30,400

வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்புத் துறை

ரூ. 35,400 – ரூ.1,30,400

முதலாள் நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை

ரூ. 19,500 – ரூ.71,900

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

துறை

கல்வித்தகுதி

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

இதில், கலந்து கொள்பவர்கள், Civil Engineering பாடத்தில் டிப்ளமோ மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை

இதில், கலந்து கொள்பவர்கள், Civil Engineering பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறை

Civil Engineering பாடத்தில் டிப்ளமோ / Architectural Assistantship பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்புத் துறை

Post Diploma in Town and Country Planning / Civil Engineering டிப்ளமோ அல்லது Architectural Assistantship டிப்ளமோ அல்லது பணிக்கு ஏற்ற கல்வியினைப் படித்திருக்க வேண்டும்.

மேலும், இத்துடன் 3 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்

முதலாள் நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் Mechanical Engineering டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தேதியின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

SC, SC(A), ST, MBC/DC, BC, BCM / ஆதரவற்ற விதவைகள்

இதர பிரிவினர்

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

37

வயது வரம்பு இல்லை

இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை

32

SC, SC(A), ST பிரிவினருக்கு – 35

MBC/DC, BC, BCM / ஆதரவற்ற விதவைகள் - 34

இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறை

32

37

வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்புத் துறை

32

37

முதலாள் நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை

32

வயது வரம்பு இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் படி தேர்வு செய்யப்படுவர்.

மேலே கூறப்பட்ட பதவியில் சேர நினைப்பவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில், எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.

✤ அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்துப் பின், தகுதியுடையவர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

TNPSC Jobs: மாதம் 1.30 லட்சம் சம்பளத்தில் அரசு வேலைக்கான அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க..!Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்