Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 4

Gowthami Subramani July 06, 2022 & 18:30 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 4Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நபர்களே இது உங்களுக்கான நேரம். டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் விடைகளுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள். அதனைத் தொடர்ந்து தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள பதிவில் கீழே உள்ள இணையதளத்தைக் க்ளிக் செய்யுங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

1. சரியான எதிர்மறைச் சொல்லைக் கொண்டு நிரப்புக.

மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள்

அ. அல்லள்                                       ஆ. அல்ல

இ. அன்று                                          ஈ. அல்லை.

விடை: அ. அல்லள்

2. பொருத்துக.

அ. வாடகை – 1. மாநிலம்           

ஆ. சம்பளம் – 2. குடிக்கூலி

இ. விசா – 3. ஊதியம்                   

ஈ. ராச்சியம் – 4. நுழைவு ஆணை

அ. 2 3 4 1                                           ஆ. 1 3 2 4

இ. 4 3 1 2                                           ஈ. 3 1 2 4

விடை: அ. 2 3 4 1

3. Website என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

அ. வலைப்பூ                                    ஆ. இணையம்

இ. மின்னஞ்சல்                               ஈ. ஊடகம்

விடை: ஆ. இணையம்

4. Ferries என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

அ. கடற்பயணம்                             ஆ. மாலுமி

இ. பயணப்படகுகள்                      ஈ. வணிகர்

விடை: இ. பயணப்படகுகள்       

5. Transplantation என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

அ. மின்னனு கருவி                        ஆ. மறித்தாக்கம்

இ. உருமாற்றுதல்                           ஈ. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

விடை: ஈ. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

6. கலை, களை, கழை – ஆகிய சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க.

அ. மூங்கில், வித்தை, நீக்கு         ஆ. வித்தை, நீக்கு, மூங்கில்

இ. வித்தை, மூங்கில், நீக்கு         ஈ. நீக்கு, வித்தை, மூங்கில்

விடை: ஆ. வித்தை, நீக்கு, மூங்கில்

7. பொருத்தாத இணையைக் கண்டறிக.

அ. Loom – தறி                                              ஆ. Dyeing – சாயம் ஏற்றுதல்

இ. Readmade Dress – ஆயத்த ஆடை       ஈ. Tanning – தையல்

விடை: ஈ. Tanning – தையல்

8. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் நெடில் எழுத்துக்கள்

அ. முப்பது                                        ஆ. இருபது

இ. நாற்பது                                       ஈ. இருபத்திரண்டு

விடை: இ. நாற்பது

9. வலி, வளி, வழி ஆகிய சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க.

அ. காற்று, பாதை, வேதனை     ஆ. வேதனை, காற்று, பாதை

இ. வேதனை, பாதை, காற்று      ஈ. பாதை, வேதனை, காற்று

விடை: ஆ. வேதனை, காற்று, பாதை

10. வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றுக்கு. ‘பெறு’

அ. பெற்றான்                                  ஆ. பெற்றாள்

இ. பெற்று                                         ஈ. பெறுதல்

விடை: அ. பெற்றான்

11. ‘தே’ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்கும் பொருள்

அ. மதில்                                           ஆ. தூய்மை

இ. கடவுள்                                         ஈ. சோலை

விடை: இ. கடவுள்

12. மதகுநீர் தாங்கும் பலகையைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

அ. ஊ                                                 ஆ. தூ

இ. ஓ                                                   ஈ. நா

விடை: இ. ஓ

13. பெயர்ச்சொல் ______ வகைப்படும்

அ. 6                                                    ஆ. 8

இ. 5                                                    ஈ. 4

விடை: அ. 6

14. நில் என்பதன் வினையெச்சம்

அ. நில்லு                                          ஆ. நின்று

இ. நிற்றல்                                         ஈ. நின்ற

விடை: ஆ. நின்று

15. “நட” என்பதன் வினையெச்சம்

அ. நடத்தல்                                      ஆ. நடந்து

இ. நடக்கும்                                      ஈ. நடத்தல்

விடை: ஆ. நடந்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்